கல்முனை-யாழ்ப்பாணம் சேவையிலீபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மீது மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி –கோயில்குளம் பகுதியில்
வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் பயணிகள் மூவர் காயமடைந்ததோடு பஸ்ஸ{க்கும் சேதம் விளைவிக்கப் பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை இ.போ.ச சாலைக்குச் சொந்தமான இந்த பஸ் செவ்வாய்க் கிழமை இரவு 8.00 மணியளவில் (ஜுன் 14, 2016) கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டு ஆரையம்பதி கோயில்குளம் பகுதியால் வரும்போது பஸ்மீது சோடா போத்தல்கள் மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் முன்னதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பாரதூரமாக காயங்களுக்குள்ளான பயணிகளில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தமது பஸ்ஸ{க்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் சேத மதிப்பீடுகள் இடம்பெறுவதாகவும் வாழைச்சேனை இபோச சாலை முகாமையாளர் எம்.ஐ. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று அறிய முடிகின்றது.
0 Comments:
Post a Comment