26 Jun 2016

மட்டு.படுவான்கரையில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசங்கள்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள அங்கலாய்க்கின்றனர்.
கடந்த 16.06.2016 அன்று மட்டக்களப்பில் நடைபெற்ற வன ஜீவராசிகள் பாதுக்காப்பு தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் வன ஜீவராசிகள் பாதுக்காப்புக்குப் பொறுப்பான அமைச்சரும் வருகை தந்திருந்தார். அக்கூட்டத்தின் சாராம்சத்தின் பிரகாரம் காட்டிலுள்ள யானைகளைப் பாதுகாக்கும் திட்டங்கள்தான் அதிகமாகக் காணப்படுகின்றது. மாறாக காட்டு யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன என அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் வவுணதீவுப் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்தது இறந்த யானையைப் பார்க்க வந்தவர்கள் ஆயிரக் கணக்கானோர்;, மாறாக யானையினால் தாக்கப்பட்டுள்ள மக்களைப் பார்ப்பதற்கு யாருமில்லை இவ்வாறான நிலமைதான் தொடர்கின்றது.

இந்நிலையிலும்கூட காட்டு யானைகளினால் பாதிப்புறும் மக்களுக்கு வழங்கப்படும், நிவாரணங்கள்கூட பெறுவதில் பல தாமதங்கள் உள்ளன. இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு அலுவலகம் இதில் அக்கறை செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  அப்பகுதியிலுள்ள மக்கள் மாத்திரமின்றி அவர்களது வாழ்வாதாரங்களும். பாதிக்கப்பட்டு வருகின்றன எனவே இவ்விடையத்தில் மாவட்ட அரச நிருவாகமும், மக்களுக்குப் பணி செய்து கொண்டிருக்கின்ற அரச சார்பற்ற அமைப்புக்களும்,  அக்கறை செலுத்தி செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

காட்டு யானைகளை எவரும் எடுத்த எடுப்பில் சுடவோ, பிடிக்கவோ முடியாது, அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு மிருகமாகும். கடந்த வருடம் வெல்லாவெளியில் வைத்து மக்களைத் தாக்கும் காட்டு யானை ஒன்றை அடையாளம் கண்டு அதனைப் பிடித்துக் கொண்டு சரணாலயத்தில் விட்டுள்ளோம்.

தற்போது எல்லைப்பகுதில் யானைப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப் பட்டு வருகின்றன, யானைப் பாதுகாப்பு வேளிகளை பிரதேச செயலாளர்களுடாக வழங்கப்பட்டு வருகின்றன. யானையினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை அடையாளம் காணப்பட்டு எமது அமைச்சினுடாக வீடுகள் அமைத்துக் கொடுத்து வருகின்றோம், ஒரு யானையைப் பிடித்துக் கொண்டு சரணாலயத்தில் விடுவதற்கு 4 லெட்சம் ரூபாய் செலவாகின்றது.

இந்நிலையிலும், மக்களின் கோரிக்கைக்கு இணைங்க வவுணதீவுப் பிரதேசத்தில் மக்களைத் தாக்குதம், யானையை அடையாளம் கண்டு அதனைப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்க அதிபரூடாதக ஒழுங்குகள் செய்து தரப்படும், என இவ்விடையம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: