15 Jun 2016

நீர் பாதுகாப்பு திட்ட அமுலாக்கம் குறித்த விழிப்புணர்வு

SHARE
நீரினது தரத்தினையும் அளவினையும் பாதுகாப்பதற்கு நீர் பாதுகாப்புத் திட்டம் அவசியமாகும். அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூதாய அடிப்படை அமைப்புக்களால் முகாமைத்துவம் செய்யப்படும் கிராமிய நீர் வழங்கல் திட்டங்களில் நீர் பாதுகாப்புத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கு தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கிராமிய நீர் பிரிவானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கினங்க வாகரை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் கிராமிய நீர் வழங்கல் திட்டத்தில் நீர் பாதுகாப்புத் திட்டத்தினை அமுல்ப்படுத்துவது  குறித்த முதலாவது விழிப்புணர்வு பயனாளிகள், மற்றும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் மத்தியில் கடமை புரியும் உத்தியோகஸ்த்தர்களுக்குமாக, இடம்பெற்றது.


இதில் கிராமிய நீருக்கு பொறுப்பான பொறியியலாளர் ஏ.எல்.எம்.பிர்தௌஸ் கிராமியநீர் வழங்கல் திட்டங்களில் நீர் பாதுகாப்புதிட்டத்தினை அமுல்படுத்தல் என்னும் தலைப்பில் விழக்கமளித்தார். 

கிராமியநீர் வழங்கல் பிரிவின் பிரதி பொதுமுகாமையாளர் டுலீப் குணவர்த்தன உட்பட மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கிராமியநீர் வழங்கல் திட்டங்களில் நீர் பாதுகாப்புத் திட்டத்தினை எவ்வாறு வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து செல்லலாம் என்பது குறித்த கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். 







SHARE

Author: verified_user

0 Comments: