30 Jun 2016

ஹக்கீம் ஹசனலி முரன்பாட்டில் ஆதாயம் தேடும் தரப்பினர். யூ.எல்.என்.எம்.முபீன் தேசிய கொள்கை பரப்பு செயலாளர், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

SHARE
ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிளுக்கு கொண்டாட்டம்.

கூத்தாடி குதூகலம் அடைபவர்களும் குளம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களும் நம் சமூகத்தில் இன்று அதிகம்.

குழப்பத்தில் குஷி அடைந்து குஷிற்குள்ளால் நன்மை அடைய நினைக்கும் பத்தி எழுத்தாளர்களும் மலிந்து விட்ட இக்காலத்தில் தோப்புக் கண்டம்இன்று சிலருக்கு தீனி போட ஆரம்பித்துள்ளது.
  
சென்ற 12.6.2016 ஞாயிறுதிகதி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்இன் தலைவர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் உச்சபீட உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்  உண்மைக்கு மாறாக பல விடயங்களை அண்மையில் தமிழ்மிரர் பத்திரிகையிலும் வளைத்தளங்களிலும் கோடிகள் கூத்தாடிகள் தப்பித் தவறி வரும் உண்மைகள்என்ற ஒரு கட்டுரையை பத்தி எழுத்தாளர் ஒருவர் பதிவேற்றிருந்தார்.   
மேற்படி தோப்புக்கண்ட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு விசேட அழைப்பு  எனக்கும் கிடைத்தது.

தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில் சமரசம் செய்ய நியமிக்கப்பட்ட உயர் சமரச குழு உறுப்பினர் என்ற வகையில் இந்த அழைப்பு எனக்கு கிடைத்தது.

தலைவருடன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செய்யிது அலிஸாஹிர் மௌலானா அவர்களும் கலந்து கொண்டார்.

ஆக அக்கூட்டதில் நானும் மௌலானாவுமே வெளிமாவட்ட உச்சபீட உறுப்பினர்களாக கலந்து கொண்டோம்.
மேற்படி கட்டுரையினை படித்த போது பல பொய்யான விடயங்கள் கூறப்பட்டிருந்தமையினால் உண்மையில் அங்கு நடந்த விடயங்களை சொல்ல வேண்டும் என என் பேனா விரும்பியது.

கட்டுரையில் குறிப்பிட்டிருந்த படி…. 
முதலில் கூட்டம் ஏன் கூட்டப்பட்டது என பலருக்கு தெரயிவில்லை என்பது உண்மையல்ல.

ஹசன்அலி –ஹக்கீம் முரண்பாட்டின் பி;ன் தன்னை சந்தித்த உயர்பீட உறுப்பினர்கள் பலரிடம் ஹசன்அலி தலைவர் ஹக்கீம் மற்றும்; கட்சி தொடர்பிலும் சில விடயங்களை சுட்டிக்காட்டி இருந்தார்.

இதன் பின் தலைவரை சந்தித்த  உறுப்பினர்கள் இவ்விடயங்களை தலைவருக்கு சுட்டிக்காட்டியதுடன் ஹசன்அலி அம்பாறை மாவட்டத்தில் பல சந்திப்புக்களையும் நடாத்தியுள்ளார்.அதனால் நீங்கள் அம்பாறை மாவட்ட உச்சபீட உறுப்பினர்களை அழைத்துஇவ்விடயங்கள் தொடர்பில் பேச வேண்டுமென்றுபல கோரிக்கைகளின் பின்னரே இக்கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கான அழைப்பினை பிரதி அமைச்சர் பைசல் காசிமே விடுத்தார்.

மேலும் கட்டுரையில் கூறிய படி 
இக் கூட்டதில் பஷீரையும்ஹசனலியையும் தலைவர் திட்டித்தீர்த்தார் என்பது உண்மையல்ல.

கூட்டத்தின் போது பேசிய தலைவர் ஹக்கீம்நாகரீகமாக வழமையான அவருடைய பாணியில் தனது கருத்தை முன்வைத்தார்: அதாவது “கட்சிக்கு கிடைத்த பணத்தை தான் சுருட்டியதாக அபாண்டமாக என்மீது பழி சுமத்தப்படுகின்றது. அப்படி பட்டவன் நானல்ல வேண்டுமென்றே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய சிலர் நினைக்கின்றனர்;. ஹசன்அலியை பஷீரே இயக்குகின்றார.;ஹசன்அலியுடன் N;பச்சு வார்த்தை நடாத்திய முபீனும்,ஜவாதும் இங்குள்ளனர். நான் இதய சுத்தியுடனேயே ஹசன்அலியுடன் பேசினேன்.  ஹசன்அலி மிகவும் நல்லவர். அவரைப்பற்றி கட்சி ஆதரவாளர்களுடையே நல்ல அபிப்பிராயம் உள்ளது சமரச பேர்ச்சுவார்த்தை குழுவின் வேண்டுகோளின் பேரில் ஹசன்அலியை டாக்டர் இஷாக் முன்பாக சந்தித்து மனம் விட்டுப் பேசினேன்.அவரும் என்னுடன் நன்றாகவே நடந்துகொண்டார்.இறுதியில்முஷாபஹா(மனவிருப்பத்துடன் ஆரத்தழுவுதல்)செய்தோம்.பின்னர் சமரச குழுவை அழைத்து நன்றி சொல்லி உத்தியோக பூர்வ ஊடக அறிக்கையை ஹசன்அலியுடன் கதைத்து விடுமாறு சொன்னேன். 

மறுநாள் ஹசன்அலியை சந்தித்து சமரச குழுவிடம் அவர் புதிய நிபந்தனை ஒன்றினை அதாவது உச்சபீட செயலாளர் மன்சூர் ஏ காதர் அப்பதவியை இராஜினாமா செய்து அதன் பின் அவரின் அதிகாரங்களை தான் பிரயோகிப்பதாக தேர்தல் ஆணையாளருக்கு தலைவர் அறிவிக்க வேண்டுமென புதிய நிபந்தனையை ஹசன்அலி முன்வைத்ததால் அவருடன் சமரசத்திற்கு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. என்பதுடன் டாக்டர் இஷாக் வீட்டில் இருந்து மலர்ந்த முகத்துடன் சென்ற ஹசன்அலி மறு நாள் புதிய நிபந்தனை வைத்ததின் பிண்ணனியில் யாரோ அவரை இயக்குவதாக நான் சந்தேகிக்கின்றேன் என தலைவர் ஹக்கீம் தனது பேச்சில் தெரிவித்தார். மாறாக தலைவர் தவிசாளரையோ,செயலாளரையோ திட்டித் தீர்க்கவில்லை.

இதன்பின்னர் கருத்து தெரிவித்தவர்கள்  ஹசன்அலிக்கு பாராளுமன்ற பதவி வழங்க கூடாது அவர் செயலாளர் நாயகமாக தொடரும் தகைமையை இழந்து வி;ட்டதாகவும் கருத்து கூறியதுடன் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள் தமது ஊருக்கு தேசிய பட்டியில் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
தோடர்ந்து பேசிய கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் அப்துல் மஜீத்(முழக்கம்)இங்கு தலைவருக்கு எதிராக பணரீதியிலான குற்றச்சாட்டை சொல்கின்றனர்.

அத்தகைய குற்றச்சாட்டை சொல்பவர்கள் தெளிவாக சொல்ல வேண்டும் இன்று இவ்விடயம் தெளிவாக பேசப்பட வேண்டும் என்பதுடன் இக்குற்றச்சாட்டினை ஹசன்அலியே கூறியதாக கலீல் மௌலவிபலரிடம் சொல்லி உள்ளார் என்றார்.
இது தொடர்பில் சபையில் இருந்து பெரிதாக கருத்து முன்வைக்கப்படவில்லை ஆனால் இச் செய்தியை பெரிதாக பெருப்பித்து அட்டாளைச்சேனையை சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் வெளியிட்டு இருந்தார்.

இச்செய்தியை ஹசன்அலி படித்தால் தலைவருடன் கோபப்பட்டு கொள்ளும் விதத்தில் அச்செய்தி எழுதப்பட்டிருந்தது. அச்செய்தியை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே வெளியிட்டிருக்க வேண்டும்.

அச்செய்தியின் ஊடாக ஹக்கீம் ஹசன்அலி மோதலை மேலும் தூண்டி ஹசன்அலிக்கு தேசிய பட்டியல்; கிடைப்பதை தடுக்கும் நோக்கம் அச்செய்தியில் உள்ளது. 

இச்செய்தியை கசிய விட்டவர்கள் ஹக்கீம் ஆதரவாளர்களாக இருந்தாலும் அவர்களின் நோக்கம் தமக்கான தேசிய பட்டியலை பெறுவதாக இருக்கலாம். அத்துடன் கட்டுரையாளர் கூறிய படி ஹக்கீம் ஹசன்அலி தொடர்பிலான செய்திகள்  பத்திரிகைக்கு கசிய விடுவதில் தலைவர் விருப்பம் கொண்டிருக்கவில்லை.ஹசன்அலியை குறித்த சிலர் இயக்குகின்றனர் ஆக அவர்களில் இருந்து ஹசன் அலியை பிரித்து எடுப்பதில் மிகக் கவனமாக செயல்பட்டார் என்பதே உண்மை.

முதலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி மக்கள் முன்பாக தானும் ஹசன்அலியும் சென்று கட்சிக்கு ஏற்பட்டுள்ள இமேஜ் இழப்பை(iஅயபந உசநயவழைn.னநஅயபந உசநயவழைn)சீர் செய்யவே விரும்பினார்.
ஹசன் அலிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை தொடர்பிலான தலைவருடனான சந்திப்பில் இதனை அவர் எம்மிடம் வலியுறுத்தியும் இருந்தார். இதனை ஹசன் அலிக்கும் நாங்கள் தெளிவாக சொல்லியும் இருந்தோம்.

ஹசன் அலி தொடர்பில் ஹக்கீம் இழிவாக பேசவில்லை. ஆனால் ஹசன்அலி சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதாவது தேசிய பட்டியலை தன் விருப்பத்திற்கு வழங்கியது.

தன்னுடைய அதிகாரத்தை பறித்து தனக்கு அநியாயம் செய்து விட்டார் என்றும். யாப்பு திருத்தங்கள் முறையாக உச்சபீடத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்களே அவையாகும்.இக்குற்றச்சாட்டுக்களை தலைவரின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம்;.யாப்பு மாற்றம் தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்தோம்.கட்சிக்குள் மசூறா(ஆலோசனை) முறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.

பணக்கொடுக்கல் வாங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு காலங்காலமாக முன்வைக்கப்பட்டு வருவது முஸ்லிம் காங்கிரசில்; வாடிக்கை. 
இக்குற்றச்சாட்டு தொடர்பில் ஹசன் அலியுடன் கட்டுரையாளர்(முபீன்) தொடர்பு கொண்டு பேசிய போது அவர் இத்தகைய கதைகள் காலம்காலமாக வருபவைதான் என்று   கூறியதுடன்  மர்ஹ_ம் தலைவர் அஷ்ரபுக்கு எதிராகவும் இத்தகைய கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.
ஹசன்அலியுடன் சமரசத்திற்கு விரும்பிக் கொண்டிருந்த தலைவர் ஹக்கீம் பின்னர் நடைபெற்ற சில நிகழ்வுகளின் பின் ஹசன்அலியுடனான உடன்பாட்டில் முரண்பாடு கொண்டவராகவே உள்ளார்.

ஹக்கீம் ஹசன்அலி பிரச்சினையை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரசை மீண்டும் ஒரு உடைவுக்குள்ளாக்கி முஸ்லிம் சமூக அரசியலை பலவீனமாக்க வேண்டும் என்று நினைக்கின்ற சக்திகள் தமது வேலையை கட்சிதமாக செயல்படுத்த திறைமறைவில் காய்களை நகர்த்துகின்றன.மேலும் பிழைப்புவாத அரசியலை நடாத்தும் சுயநல முஸ்லிம் அரசியல் வாதிகளும் இப்பிரச்சினையை பயன்படுத்தி தன் இலக்கை அடைந்து கொள்ள நினைக்கின்றனர்.

தலைவர் ஹக்கீம் தலைமைத்துவத்திற்கு வந்ததன் பின்னரான முஸ்லிம் காங்கிரசை நோக்கினால் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் அரசியலை அழிக்க நினைத்த வரலாறு நெடுகிலும் உண்டு.
இன்று ஹக்கீம் பலம் பொருந்தியவராக உள்ளார்.அவரின் தலைமைத்துவப் பண்பை எதிரிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.

கட்சியும் பலமடைந்துள்ளதுடன் கட்சிக்கான மக்களின் செல்வாக்கு மிக ஆழமாக மேலோங்கியுள்ளது. இத்தகைய கட்சியின் இன்றைய அடைவுகளுக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்ட சென்ற பெருமை தலைவர் ஹக்கிமையே சாரும். இதற்கு கட்சியின் இறுதி மாநாடு போதிய ஆதாரமாகும்.

கட்சியின் தலைமையை கைப்பற்றி கட்சியை அழிக்க நினைத்தவர்கள் இன்று வேறு உபாயங்களையும் கையாள தொடங்கியுள்ளனர்.முஸ்லிம் கூட்டமைப்பு என்பதே அந்த உபாயமாகும்.முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகம் சார்ந்த தேவையான ஒன்றே. ஆனால் முன்மொழிபவர்களின் இதயம் சுத்தமாக இல்லை இவ்விடயம் தொடர்பிலான ஒரு சந்திப்பில் முன்மொழியப்பட்ட பதவிப் பங்கீடு தொடர்பில் கிடைத்த தகவலொன்றை முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அதாவது முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்று சேரும் முஸ்லிம் கூட்டமைப்பின் பதவி பகிர்வில் முஸ்லிம் காங்கிரசுக்கு செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் வழங்குவதாக ஆலோசிக்கப்பட்டதாகக்கூறினார்.
அமையப்போகும் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் ஹக்கீம் இல்லாத இன்னொருவரே. இது ஹக்கீமை ஓரங்கட்டுகின்ற நடவடிக்கை என்பதே  இதன் அர்த்தமாகும்.

தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் தலைமை வழங்கக் கூடியவர் ஹக்கீமே என எதிரிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.ஆனால் அவர்கள் சில மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்காளியாக உள்ளது.யாப்பு திருத்த ஏற்பாடுகள் தொடர்பிலான முன்னெடுப்புகள் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் முஸ்லிம் அரசியல் பலமடைய வேண்டும் மாறாக முஸ்லிம் அரசியல் பலவீனம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும்.முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து போனவர்கள் மீண்டும் இக்கட்சியில் இணைய வேண்டும் என தலைவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று கட்சி புரனமைப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் கட்சிக்குள் ஒற்றுமை அவசியம் ஆக தலைவரும் செயலாளரும் மனம்திறந்து பேசி விட்டுக் கொடுப்புடன் ஒற்றுமைப்பட வேண்டும்.

சில பத்தி எழுத்தார்கள் அரசியல்வாதிகளின் கூஜா தூக்குகின்றவர்களாக உள்ளனர்.அவர்களில் சிலர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவரை சந்தித்து சன்மானங்களை பெறுவர் அவர்களின் பேனா அமைதி அடையும். சற்று காலங்கழிய மீண்டும் பேனா பொங்கி எழும் கோடிகள்,கூத்தாடிகல், பத்தியாளர் இந்த வறையரைக்குள் வருவார்களா தெரியவில்லை. அவர் கட்டுரையில் சொல்லியுள்ள பொய்களைப் பார்க்கும் போது இவ்வாறு எண்ணத்தோன்றுவது தவிர்க்க முடியாதுள்ளது.நேர்மையாக பேனா பிடிப்பவர்கள் பலருக்கு மத்தியில் இத்தகைய காசிக்காக கட்டுரை எழுதும் சிறுமை பத்தியாளர்களும் இல்லாமலில்லை.

இங்கு நான்  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சிக்குள் குறைகள்,பிழைகள் இல்லையென வாதிடவில்லை தவிசாளர் பஷீர்சேகுதாவூத் தொடர்பில் இங்கு நான் விரிவாக பேச இப்போது விரும்பவில்லை தலைவருக்கும் தவிசாளருக்கும் இடையிலான பனிப்போர் 2004 இல் ஆரம்பித்து 2012 கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது போர் முரசு கொட்டியது.

தலைவருக்கும் தவிசாளருக்கும் இடையில் சமரசம் செய்வதில் முன்னின்று பாடுபட்டவர்களில் நான் (கட்டுரையாளர்); முதன்மையானவன். அதனால் பாதிக்கப்படவனும் கூட.தவிசாளர் 2004 தொடக்கம் தலைவரை மிரட்டி காரியம் பார்க்கும் பாணியிலான செயல்பாட்டினை முன்னெடுத்து வந்துள்ளார்.
தற்போது கட்சியை சீர்படுத்துவது தொடர்பில் தவிசாளரின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 
காலம் எல்லோருக்கும் பதில் சொல்லும்.

SHARE

Author: verified_user

0 Comments: