28 Jun 2016

ஏறாவூர் ஐயங்கேணி ரெட்பானாபுரம் பாழடைந்த வளவிலிருந்து கைக்குண்டு மீட்பு

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜுன் 26, 2016) கை;குண்டொன்று
மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ரெட்பானாபுரம் வீதியிலுள்ள பாழடைந்த வளவொன்றில் மட்பாண்டம் சூளையிடுவதற்காக மண்பாண்டம் உற்பத்தி செய்யும் பெண்கள் குழியொன்றைத் தோண்டும் போது இந்தக் கைக்குண்டு வெளித் தெரிந்துள்ளது. உடனடியாக இது பற்றி ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து கைக்குண்டை மீட்டனர்.

இது போர் இடம்பெற்ற காலப்பகுதியில், பயன்படுத்துவதற்காக எல்ரீரீஈ இனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: