கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும் சின்னக் கதிர்காமம் என போற்றப்படுவதுமான மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமையப் பெற்றுள்ள தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை (30) காலை 08 மணிக்கு பக்தர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
மலைஉச்சிப்பிள்ளையாருக்கு பூசை ஆராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து, முருகப் பெருமானுக்கும் பூசைகள் ஆராதனைகள் நடைபெற்று கருவறையில் வைக்கப்பட்டிருந்த கொடிச்சீலை பிரதமகுருவால் ஆலய தலைவரிடம் வழங்கப்பட்டது. பின் ஆலயத்தினை சுற்றி கொடிச்சீலை கொண்டுவரப்பட்டு பிரதமகுருவால் கொடியேற்றப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வின் போது பல பாகங்களிலும் இருந்து அடியார்கள் வருகைதந்திருந்தனர்.
2016 ஆம் ஆண்டு மஹோற்சவத்திற்காக வியாழக் கிழமை (30) கொடியேற்றப்பட்டுள்ள இவ்வாலயத்தில் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று எதிர்வரும் 21.07.2016ம் திகதி திருவோண நட்சத்திரத்தில் காலை 06 மணிக்கு தீர்தோற்சவமும் இடம்பெற்று ஆலய உற்சவம் நிறைவு பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment