28 Jun 2016

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

SHARE
(க.விஜி) 

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின்  வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் வியாழக்கிழமை(30) பிற்பகல் 2 மணியளவில் அன்னை
வெறணிகா மண்டபத்தில் வித்தியாலய முதல்வர் அருட்சகோதரி ஆர்.ரீ.அருட்மரியா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு ஆத்மீக அதிதியாக மட்டு.ஆயர் அருட்சகோதரர் கலாநிதி ஜோசப் பொன்னையா அவர்களும்,பிரதம அதிதியாக கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்விஅமைச்சின் கல்விப் பணிப்பாளர் (தமிழ்பகுதி) எஸ்.முரளிதரன், மட்டக்களப்பு  வலயக்கல்விப் பணிப்பாளர்  கே.பாஸ்கரன் அவர்களும், விஷேட அதியாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியும், இப்பாடசாலையின் பழையமாணவியுமான திருமதி.அகிலா சிவபிரமியன் ஆகியோர்கள், உட்பட பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், பழையமாணவசங்கம்,பாடசாலை அபிவிருத்தி சங்கம், எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.


.பொ.(சா.தா)பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், இணைப் பாடவிதானச் செயற்பாடுகளில் சித்தியடைந்த மாணவர்கள், புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், போன்றோருக்கு  பரிசளிப்புக்கள் நடைபெறவுள்ளது. இவர்களுக்கு வெற்றிக்கேடயங்கள்,பரிசுப்பொருட்கள்,வழங்கி வைக்கப்படவுள்ளன.



SHARE

Author: verified_user

0 Comments: