26 Jun 2016

ஓட்டமாவடி கிராமிய மீன் விற்பனையாளர் அமைப்பு கிழக்கு முதலமைச்சரிடம் வேண்டுகோள் முன்வைப்பு

SHARE
ஓட்டமாவடி கிராமிய மீனவர் அமைப்பு (Oddmavady Rural Fishers Organizationதமது பிரதேச மீன் விற்பனையாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இடம் பல வேண்டுகோள்களை முன்வைத்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் எம்.எஸ். ஐனுல் ஞாயிறன்று தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் கடந்த வியாழக்கிழமை (ஜுன் 23,2016) அன்று திறந்து வைக்கப்பட்ட புதிய மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியிலுள்ள தேவைப்பாடுகள் குறித்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவிடயமாக முதலமைச்சரிடம் ஞாயிறன்று (ஜுன் 26, 2016) கையளிக்கப்பட்டுள்ள வேண்டுகோளில், புதிய மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியின் பின்புறத்தை செப்பனிடல், கடைத் தொகுதியிலுள்ள 31 கடைகளுக்கும் குடிதண்ணீரும் பாவனைக்குரிய தண்ணீரும் பெற்றுத்தரல், புதிய மீன் சந்தையின் முன்புறத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி சகதியாவதைக் கட்டுப்படுத்த கருங்கல்; தூள் கொண்டு நிரப்புதல், கடைகளுக்குரிய மாதாந்த வாடகையை 2000 ரூபாவாக நிர்ணயித்தல், மீன் விற்பனைக் கடைகளுக்கான குத்தகைக் காலத்தை 10 வருடங்கள் என வரையறுத்தல், மீனவர்களினது பொருளாதார தொழில் ஊக்குவிப்புக்காக வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொள்ளும் வழிவகைகளை ஏற்படுத்தித் தரல் போன்ற 6 அம்ச வேண்டுகோள்கள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன

SHARE

Author: verified_user

0 Comments: