இலங்கை முஸ்லீம் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வினை அமெரிக்கத் தூதுவர் அதுல் கே~ப் அவர்கள் நேற்று ஒழுங்கு செய்திருந்தார்.
றமழான் மாதத்தில் அமெரிக்கத் தூதரகத்தினால் இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று இப்தார் நிகழ்வுகளில் ஒன்றாக இது உள்ளது. யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு பாத்திமா நலன்புரி நிலையத்தில் சிறுமியருக்கான இப்தார் நிகழ்வுகளும் இவற்றில் உள்ளடங்கும்.
“றமழானின் பிரதான விழுமியங்களை நாம் பிரதிபலிக்கும் வேளையில், நாட்டின் எதிர்காலம் குறித்தும், ஐக்கியப்பட்ட, நல்லிணக்கமான, சமாதானமான, வளமான அனைவருக்கும் சமமான சந்தர்ப்பம் கொண்ட தேசமாக தமது நாட்டினை நிலைமாற்றும் நோக்குடன் இலங்கையர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம்” என தூதுவர் அதுல் கே~ப் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment