7 Jun 2016

குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்

SHARE
(இ.சுதா)

சயமக் கிரியைகளுக்காக நாவிதன்வெளி தாமரைக் குளத்திற்கு பூ பறிப்பதற்கு சென்ற அம்பாறை 15ம் கிராமத்தினைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிற்றம்பலம் அருலம்பலம்( வயது 45) நீரில் மூழ்கி மரணமான சம்பவம் கடந்த3ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் நாவிதன்வெளிப்பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் நடைபெற இருந்த வைரவ பூவைக்காக நாவிதன்வெளி குளத்திற்கு தாமரைப் பூக்களைப் பறிப்பதற்காக சென்ற நிலையில் குளத்தில் இறங்கி நிலையில் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.இந் நிலையில் பூ பறிப்பதற்கு சென்ற நபரை குடும்பத்தவர்கள் தேடிய நிலையில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் குளக்கட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் குளத்தில் மூழ்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டார். 

சம்பவம் தொடர்பாக குறித்த இடத்திற்கு விரைந்த சவளக்கடைப் பொலிஸார் சடலத்தினை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: