(எச்.ஏ.ஹுஸைன்)
இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை, ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை, சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, கிரான், பாசிக்குடா, வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை
14.06.2016 எவ்வித முன்னறிவித்தலுமின்றி, அடிக்கடி மின் தடை இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அலுவலர்களும் வீட்டு மின் பாவினையாளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து சுமார் 25 இற்கு மேற்பட்ட தடவைகள் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் அலுவலகங்களில் குறிப்பாக கணினிகளின் ஊடாக கடமையாற்றுவோர் அதிக சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதேவேளை வைத்தியசாலை போன்ற அத்தியாவசிய சேவை நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சார விநியோக மார்க்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வேலைகள் இடம்பெறுவதால் இந்த மின் தடை ஏற்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் அலுவலக உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment