மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என். விமல்ராஜ் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பிரதேச செயலக ரீதியாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயற்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல், அரசாங்கத்திற்கான வருவாயினை அதிகரித்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
1972 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காணி சீர்திருத்தத்துக்கான செயற்திட்டம் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டது.
இந்த ஆணைக்குழு, உண்மையில் அதிகளவான காணிகளை வைத்திருப்பதனைத் தடுப்பதுடன், காணிச் சமமின்மையைச் சரிசெய்து பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடலில் காணி இராஜாங்க அமைச்சின் செயலாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராஜா, 3 மாவட்டங்களையும் பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment