20 Jun 2016

மத்திய மாகாணத்தில், பிரதான ஆஸ்பத்திரி சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

SHARE
(ஜெம்சாத் இக்பால்)

மத்திய மாகாணத்தில், பிரதான ஆஸ்பத்திரி சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாக முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் பங்குபற்றுதலுடன் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தில் திங்கட்கிழமை (20) நடைபெற்றது. இதில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி. சாந்தி சமரசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளின் மாவட்ட வைத்திய அதிகாரிகள்; ஏனைய உயர் அதிகாரிகள்;, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயிமுல்லாஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இதன்போது குறிப்பாக, கட்டுகஸ்தொட்டை, தெல்தொட்டை, கலகெதர, அக்குறனை ஆகிய மாவட்ட ஆஸ்பத்திரிகள் உட்பட தம்புள்ளை மற்றும் ரிகிலகஸ்கட ஆதார ஆஸ்பத்திரிகளின் புதிய கட்டட வசதிகள், புனர் நிர்மாணம், உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களின் தேவை, தாதிமார் நியமனம் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவற்றிற்காக 1500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


SHARE

Author: verified_user

0 Comments: