30 Jun 2016

கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்-ஹாபிழ் களுக்கு கிழக்கு முதல்வர் விடுக்கு அறிவித்தல்

SHARE
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அல்-ஹாபிழ் (அல்-குர்ஆன் மனனம் செய்தவர்கள்) களை ஒன்றிணைக்கும் பெரும் பணியை கிழக்கு முதல்வர் ஏற்படுத்தியிருக்கிறார்.
இதன் மூலம் ஹாபிழ் களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பிரயோசனமான பெரும் நிகழ்வுகள், கருத்தரங்குகள் என்பன இடம்பெறவிருக்கின்றன.
எனவே விரைவில் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் கிழக்கின்  மூன்று மாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட்டு  அதனைப் பெற்று அனைவரையும் இணைந்து கொண்டு பிரயோசனம் அடைவதுடன் மற்றவர்களுக்கும் பிரயோசனம் அடைய வழிவகுக்குமாறு முதலமைச்சர் கேட்டுள்ளார்.

எனவே கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் ஹாபிழ்கள் உங்கள் பெயர் விபரங்களை எதிர்வரும் 10.07.2016 க்கு முதல் media.eastcm@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும்
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள  தொலைபேசி இலக்கம்:

0771276680 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: