மட்.பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் வகுப்பறைகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டிடடம் மற்றும் முன் நுழைவாயில் திறப்புவிழா வியாழக்கிழமை (30) கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னனின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்ளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்களும் கிராமப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறையினை பாடசாலைச் சமுகத்தினால் இதன்போது கல்வி இராஜாங்க அமைச்சருக்கு எடுத்தியியம்பட்டன.
தற்போதைய நல்லாட்சியில் தனக்கு கல்வி இராஜாங்க கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் இதனைக் கொண்டு வடக்குகிழக்கு உட்பட சகலதமிழ் பாடசாலைகள் மற்றும் கல்வி வளநிலையங்கள் யாவற்றையும் முடிந்தளவு அபிவிருத்தி செய்வேன் என உறுதியளித்தார். இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.
0 Comments:
Post a Comment