21 Jun 2016

தமிழ் - முஸ்லிம் உறவினை மேலும் வலுவூட்ட வேண்டும்.

SHARE
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகமான தமிழ் - முஸ்லிம் மக்களிடையேயான உறவு மேலும் வலுவூட்டப்பட வேண்டும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும்
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், அதற்கான நடவடிக்கைகளை அரசியல்வதிகள், மதத்தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

வடக்குகிழக்கு தமிழ் பேசும் மக்களிடையே விரிசல் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று சிங்கள தேசியவாத அமைப்புக்கள் திட்டமிட்டு செயற்பபட்டு வருவதாகவும், அதனை முறியடிக்க நாம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது

நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான நிலையை வடகிழக்கு மக்களும் அனுபவிக்கின்றனர். எனினும், நிலையான சமாதானம் - நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுஒற்றுமை மேலும் அதிகரிக்க வேண்டும்

ஆனால், கிழக்கு மாகாணத்தில் அண்மைக்கால போக்குகள் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர். ஆகவே, இதனை சரிசெய்ய தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகள், இயக்கங்கள் , அமைப்புக்கள், மத ஸ்தலங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரு சமூகங்களும் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் பல உள்ளன. மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு, இராணுவத் தலையீடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் நாம் ஒன்றினைந்து செயலாற்ற வேண்டும்.- எனத்தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: