15 Jun 2016

மதுபான சாலை அமைக்க ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை. கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன்

SHARE

கோறளைப்பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள கும்புறுமூலையில் மதுபான சாலை எதுவும் அமைக்க ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என கோறளைப்பற்று பிரதேச
சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் செவ்வாய்க்கிழமை (ஜுன் 14. 2016) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை பகுதியில் மதுபான சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிந்தது பற்றி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தவாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ். வாசுதேவன், மற்றும்  பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் ஆகியோருக்கு சனிக்கிழமை 11.06.2016 கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

மட்டக்களப்பில் அளவுக்கதிமான மதுபான சாலைகள் உள்ளதால், அது சமூகச் சீரழிவுகளுக்கும் வறுமை நிலைக்கும் இட்டுச் செல்கின்றது. எனவே, இனிமேல் புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என அந்தக் கடிதத்தில் அவர் அதிகாரிகளைக் கேட்டிருந்தார்.

இது தொடர்பாக வாழைச்சேனை பிரதேச சபைச் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதேச சபைச் செயலாளர் மேலும், கூறுகையில்… 

பிரபலமான மதுசார நிறுவனம் ஒன்று அந்த நிறுவனம் கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவில் விலைக்கு வாங்கிய 25 ஏக்கர் காணியில் எதனோல் மதுசார மூலப் பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி கேட்டு திட்ட முன்மொழிவொன்றை கடந்த மார்ச் (2016) இல் சமர்ப்பித்திருந்தது.

ஆயினும், அதற்கு இன்னமும் எமது பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை.
உள்ளுரில் உற்பத்தியாகும் சோளம் மற்றும் நெல் ஆகியவற்றைக் கொண்டு எதனோல் தயாரிக்கப் போவதாகவும் இதன் மூலம் உள்ளுரில் சுமார் 500 பேருக்கு நேரடித் தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என்றும் அந்த நிறுவனம் தனது திட்ட முன்மொழிவில் தெரிவித்திருந்தது. அதற்கு பிரதேச சபை இன்னமும் அனுமதி வழங்காதது குறித்து அந்த நிறுவனம் நினைவூட்டல் கடிதமொன்றை ஏப்ரல் மாதம் பிரதேச சபைக்கு அனுப்பியிருந்ததாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அக்கறையுள்ள பல தரப்பினரும் (ளுவயமந ர்ழடனநசள) கரிசனை கொண்டு அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருவதால் அது விடயமாக சமூக மற்றும் அரசியல் மட்டத் தலைவர்களுடனும் உள்ளுராட்சி திணைக்களத்துடனும் விரிவாகக் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்க முடியும். சுற்றுச் சூழல் பாதிப்புக்கள், மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த கரிசனைகள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தலின்படி மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் சுமார் 82 மதுபான சாலைகளே இருக்க முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளபோதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 62 மதுபான சாலைகளுக்கு மேல் உள்ளன.
இதற்கு எதிராக  பொது அமைப்புக்களும் மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: