(இ.சுதா)
மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவமானது எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை இரவு திருக்கதவு திறத்தல் நிகழ்வுடன்
ஆரம்பமாகி 24ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை இடம் பெறவுள்ள சக்கரைப் பொங்களுடன் இவ்வருட அம்மன் உற்சவமானது இன்pதே நிறைவு பெறவுள்ளது.
உற்சவ கால கிரியா நிகழ்வுகளாக 20ம் திகதி திங்கட் கிழமை இரவு அம்மன் ஊர்வல நிகழ்வும் 22ம் திகதி புதன் கிழமை கன்னிக்கால் வெட்டு நிகழ்வினைத் தொடர்ந்து இரவு அம்மன் திருக்கல்யாண நிகழ்வும் 23ம் திகதி வியாழக்கிழமை மாலை சமூத்திர நீராடல் நிகழ்வு இடம் பெற்று இரவு தீக்குழி மூட்டுகின்ற கிரியை இடம் பெற்று 24ம் திகதி காலை தீமிதித்தல் நிகழ்வினைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை சக்கரை அமுது படைத்தல் நிகழ்வுடன் உற்சவமானது நிறைவு பெறவுள்ளது.
உற்சவ காலங்களில் மடை பரவுதல்இ தெய்வம் ஆடுதல்இ கொழு வைத்தல்இவாக்குச் சொல்லுதல் வட்டுக் குத்துதல்இமடிப்பிச்சை எடுத்தல் இபிள்ளை விற்று வாங்குதல் இதவநிலை ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு.நல்லராசா குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment