19 Jun 2016

உலகளாவிய தொழில்முனைவோர் மாநாடு 2016 இற்கு உறுதியான இலங்கை பிரதிநிதிகள் குழு செல்கின்றது.

SHARE
அடுத்த வாரம் ஸ்டன்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள 2016ஆம்
ஆண்டு உலகளாவிய தொழில் முனைவோர் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து நான்கு தொழில்முனைவோருடன் இணைந்து யசிசூரி பிறைவேட் லிமிட்டட்டின் ஸ்தாபகர் இலங்கை ஆடை வடிவமைப்பாளர் யசிசூரி கிரிபண்டாரவும்
அமெரிக்கத் தூதரகத்தினால் அனுசரணையளிக்கப்படவுள்ளார்.  என அமெரிக்கத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


சிலிக்கன் வெலியைச் சேர்ந்த முன்னணி தொழில்முனைவோர் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் தமது அனுபவங்களையும், எண்ணங்களையும், உலகெங்கிலும் உள்ள ஏனைய தொழில்முனைவோருடன் பகிர்ந்து
கொள்வதற்கான களமாக இந்த மாநாடு அமையும். “பெண்கள் வெற்றி பெறும் போது, நாடு முழுவதும் வெற்றி பெறும் என நாம் அறிவோம்” என
அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தார். “இந்த சந்தர்ப்பங்களை பரவலாக்குவதில் பெண் தொழில்முனைவோர் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஓபாமாவினால் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்முனைவோர் மாநாடு 170 நாடுகளைச் சேர்ந்த 700 தொழில்முனைவோரினை உள்ளடக்கும். 

கிரிபண்டாரவுடன், ரிலாயன்ஸ் நெட்வேர்க்ஸின் பணிப்பாளர் தோபியஸ் வசந்த்குமார், ஊடக தொழில்முனைவாளர் சுஹைல் ஹிசாம், பைட்ஸ்ரெக்
ஹோஸ்டிங்கின் பணிப்பாளர் மாக்ஸ் ரணவீரகே, மற்றும் டபுள் பப்ளிகேஷன்ஸின்
முகாமைத்துவப் பணிப்பாளர் டினுஸ்க சந்திரசேன ஆகியோரும் இந்த மாநாட்டில்
பங்கேற்கவுள்ளனர்.என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: