2016 ஆம் ஆண்டிற்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட ஆங்கில மொழிதினப் போட்டிகள் மட்டக்களப்பு மேற்குகல்வி வலயத்தினால் கடந்த 04
ஆம் திகதி சனிக்கிழமையும் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடாத்தப்பட்டது.
04 ஆம் திகதிகையெழுத்து, கூட்டெழுத்து, சொல்வதெழுதல், பேச்சு, மற்றும் கவிதையாக்கம், போன்ற, நிகழ்வுகள் முதலைக்குடா மகாவித்தியாலயத்திலும், 05 ஆம் திகதி அனைத்து பிரிவினருக்குமான நாடகப் போட்டிகள் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திலும் மற்றும் கொக்கட்டிச்சோலை கலாசாரமண்டபத்திலும் நடைபெற்றன.
இவ் நிகழ்வுகள் மட்டக்களப்பு மேற்குகல்விவலயப் பணிப்பாளரும், இந் நிகழ்வுகளின் தலைவருமாகிய கே.சத்தியநாதன் அவர்களதும், செயலாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளர் - ஆங்கிலம் திருமதி.எம்.பி.எஸ்.சுரேஸ்குமார் அவர்களதும், குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றன.
இப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 23 படசாலைகளைச் சேர்ந்த 64 மாணவர்களும், பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து 18 படசாலைகளைச் சேர்ந்த, 69 மாணவர்களும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து 22 படசாலைகளைச் சேர்ந்த74,மாணவர்களும், கல்குடா கல்வி வலயத்திலிருந்து 15 படசாலைகளைச் சேர்ந்த 79 மாணவர்களும், மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 12 படசாலைகளைச் சேர்ந்த, 88 மாணவர்களும், இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இது குறித்து மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளரும், இந் நிகழ்வுகளின் தலைவருமாகிய கே.சத்தியநாதன்; கருத்து தெரிவிக்கையில்…..
மட்டக்களப்பு மேற்குவலயம் ஆர்ம்பிக்கப்பட்டு முதன் முறையாக இவ்வலயத்தில் மாவட்ட மட்ட ஆங்கில மொழித்தினப் போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதற்கான அனுமதியை அளித்த, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் - ஆங்கிலம் அவர்களுக்கும், சிறப்பான முறையில் நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்து உரியநேரத்தில் நடாத்தி முடிக்க ஏற்பாடுகளைச் செய்த இந்நிகழ்வின் செயலாளரும் ஆங்கிலபாட உதவிக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.எம்.பி.எஸ்.சுரேஸ்குமார் அவர்களுக்கும், எல்லா வழிகளிலும் தமது ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், அனைத்து ஆங்கில ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
மட்டக்களக்கு மேற்குவலயம் ஆம்பிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் மாகாணமட்ட ஆங்கிலதினப் போட்டிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுமளவு கூடுதலாக இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன், இது ஓரு வளர்ச்சிப் போக்கைக் காட்டுகின்றது. இம்மாணவர்களின் வெற்றிக்காக அயராது உழைத்த அனைவருக்கும், நன்றியைத் தெரிவிப்பதோடு,
இந்நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கிய மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் - ஆங்கிலம் ஜே.ஏ.ஐ.ஜெயலத், அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு நடுவர்களாக கடமையாற்றிய ஆங்கில ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தை எங்களுக்கு இப்போட்டிக்காக வழங்கிய பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என மாவட்ட மட்ட ஆங்கிலதினப் போட்டிகள் தொடர்பில் இப்போட்டி நிகழ்வின், செயலாளரும், ஆங்கிலபாட உதவிக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.எம்.பி.எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
போட்டிமுடிவுகளின் படி மட்டக்களப்பு வலய மாணவர்களுக்கு கூடுதலான இடங்கள் கிடைக்கப்பட்டு அவ்வலயம் முன்னிலையில் இருப்பதாகவும், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆங்கிலம்) அவர்களின் கடிதத்திற்கு அமைவாகமாகாண மட்டப் போட்டிகள் யூலை 9 ஆம் திகதி எழுத்துப் போட்டிகளும், யூலை - 30 ஆம் திகதியும், தனிநிகழ்ச்சிகளும், யூலை 31 ஆம் திகதி நாடகப் போட்டிகளும் கல்முனையில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment