25 May 2016

பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்

SHARE
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் முகாமைத்துவபீடத்தின் இரண்டாம் வருட மாணவனான லட்சியமூர்த்தி சுமேஸ்காந் (வயது 23) என்பவர் பெரும்பான்மையின மாணவர்கள் சிலரினால் செவ்வாய்க்கிழமை (24) மாலை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் தனது
பேஸ்புக்கில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றைப் தரவேற்றம் செய்துள்ளார்.

இவரது பேஸ்புக்கை அவதானித்த பெரும்பான்மையின மாணவர்கள் சிலர்; பேஸ்புக்கிலுள்ள புகைப்படத்தை நீக்குமாறு கூறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவன் கூறினார். இந்தச் சம்பவம்; தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
SHARE

Author: verified_user

0 Comments: