6 May 2016

சிறுமிக்கு சூடு வைத்த விவகாரம் தம்பதிகளுக்கு மேலும் ஒரு நாள் விளக்கமறியல் நீடிப்பு

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடியில் 10 வயது சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவி
ஆகியோர்களது வழக்கு வியாழக்கிழமை 05.05.2016 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவருக்கும் வெள்ளிக்கிழமை வரை (06.05.2016) விளக்கமறியல் நீடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியில் சிறுமியொருவருக்கு அவரது தந்தையின் இரண்டாவது மனைவி நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் அவரின் இரண்டாவது மனைவியும்  வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

சிறுமிக்கு சூடு வைத்த விவகாரம் தொடர்பாக மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் காத்தான்குடி பொலிஸாரால் கடந்த 13.03.2016 அன்று கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: