மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பகுதியில் இன்று திங்கட் கிழமை (09) காலை இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் 5 போர் படுகாயடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடியிலிந்து மட்டக்களப்புக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த இருவர் களுதாவளை பிரதான வீதியில் வைத்து மின் கம்பம் ஒன்றின் மீது மோதியுள்ளனர். இதில் படுகாயமடைந்த களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த டினுக்சன் (வயது 26), பத்மசிறி (வயது 26) ஆகிய இருவரும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக இருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்றின் மீது கல்முனைக் குடியிலிருந்து காத்தான்குடி நோக்கி பின்னால் சென்று கொண்டிந்த, முச்சக்கரவண்டி ஒன்று தேற்றாத்தீவு பிரதான வீதியில் வைத்து மோதியதில் காலிதீன் அஸீசா (வயது 47), சுலைமான்லெவ்வை காலீதீன் (வயது 48), றிபான் வயது (28) ஆகிய மூவரும்படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களில் றிபான் வயது (28) என்பவர்
சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மேலும் தெரிவித்தார். இவ்விபத்து இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்ற களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment