15 May 2016

கிழக்கில் பலத்த மழை

SHARE
மிக நீண்ட வறட்சிக்குப் பின்பு கிழக்கின் பல பகுதிகளிலும், பரவலான இடிமின்னலுடன் கூடிய மழை சனிக்கிழமை (14) இரவு தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் (15) பலத்த இடைவிடாத மழை பெய்து வருகின்றது. 
மட்டக்களப்பு நகரில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக ஞாயிறு காலை 5.30 மணிவரை 48.07 மில்லி மீற்றர் கிடைக்கப் பெற்றுள்ளதாக வானிலை அவதான நிலைய கடமை நேரபொறுப்பதிகாரி ஏ.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.

மிக நீண்ட வரட்சியான காலத்திற்குப் பின்னர் தற்போது கிழக்கில் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.

இதேவேளை தற்போதைய மழை வீழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் நாடு பூராகவும் எதிர்பார்க்கப் படுவதாகக் கூறியுள்ள வானிலை அவதான நிலையம் இடிமின்னல் பற்றி அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதகாலமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவிய அதிக வெப்ப நிலை காரணமாக பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடப்படுவது தொடர்பாக மத்திய  அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் சர்ச்சை எழுந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிக வெப்ப நிலை காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண பாடசாலைகள் மே மாதம் முதலாம் வாரம் மட்டும் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. இருப்பினும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள  தேசிய பாடசாலைகள் வழமை போல்  நடைபெற்றமையும், குறிப்பிடத்தக்கதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: