3 May 2016

ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பி பொடிகளை வைத்திருந்த இளைஞர் கைது

SHARE
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் வீதி, பாலமுனை-2  கிராமத்தில்  
ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பி பொடிகள் அடங்கிய  பொதிகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் திங்களன்று இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது பாலமுனையில் அவர் மறைந்திருந்த வீட்டில் இருந்து 450 மில்லிகிராம் நிறையுடைய 4 ஹெரோயின் பொதிகளும், 4350 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா மற்றும் கோப்பி கலந்த பொடி அடங்கிய பொதியும் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றைத் தம் வசம் வைத்திருந்த 19 வயதான இளைஞனும் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் ஏற்கெனவே, கஞ்சா மற்றும் கேரளா கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு முறை கைது செய்யப்பட்டு வழக்கை எதிர் கொண்டு வருபவர் என்றும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: