7 May 2016

காத்தான்குடியில் புதிய வர்த்தக சங்கம் உதயம்

SHARE
காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் புதிய வர்த்தகம் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத் தலைவர் றவூப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் வர்த்தக நகராகக் காணப்படும், காத்தான்குடி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கம் ஒன்றை அமைக்க காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்ததற்கமைவாக இந்த புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை (06)  இரவுத் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி 01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றபோது புதிய வர்த்தக சங்கத்தின் தலைவராக வர்த்தகர் ஏ.ஜி. அஜ்வத் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக வர்த்தகர் எம்.எம்.ஏ. சித்தீக், பொருளாளராக வர்த்தகர் எம்.ஐ.எம். மக்பூல் ஆகியோரும் செய்யப்பட்டனர். கூடவே உப தலைவர்களாக ஏ.எல்.அஸ்ரப், மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம். பரீட், உப செயலாளராக சி.எம்.எம். மர்சூக் உட்பட 35 வர்த்தகர்களைக் கொண்ட நிருவாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம். சபீல் காத்தான்குடியில் வர்த்தகர் சங்கத்தினை மீள புனரமைப்பதில் சம்மேளனம் மிகவும் ஆர்வம் காட்டியிருந்தது.

காத்தான்குடியை வர்த்தக மையப்பகுதியாக மாற்றுவதில் இந்த வர்த்தகர் சங்கம் பாடுபட வேண்டும். இந்த சங்கத்தின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் உதவியாக இருக்கும் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: