9 May 2016

கட்டுரை ஆயுதமேந்திய பெண்களுக்கு அதரவு வழங்க யாருமில்லை

SHARE
(சக்தி) 

உலக நாடுகளில் போராட்டங்கள் வெடிக்காத அல்லது கிளர்ச்சிகள் உருவாகாத இடங்கள் இல்லை என்றே நோக்கலாம். அதுபோன்றுதான் இலங்கைத் தீவினிலும், கடந்த காலங்களில் அகிம்சைப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்தன். பின்னர் அவை ஆயுதக்கலாசாரமாக உருவெடுத்திருந்தன. 
குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமக்கான சுயநிர்ணய ஆட்சி வேண்டும் என்ற நோக்குடன் ஆயுதம் ஏந்திப் போராடினர்.
இவ்வாறான போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் அரசியல் ரீதியான முன்நெடுப்புக்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க கடந்த கால ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பெண் போராளிகள் தற்போது சமூக மயப்படுத்தப்பட்டு குடும்ப வாழ்வில் இணைந்துள்ளார்கள். 

இருந்த போதிலும் அவர்கள் தற்போதைய நல்லட்சி என்று சொல்லப்படுகின்ற காலத்திலும் பல்வேறுபட்ட அடிப்படைப் பிரச்சபைகளை எதிர் கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே முன்னாள் பெண்போராளிகள் தற்போது எதிர் கொண்டு வரும் இன்னல்கள் குறித்து இன்றய கட்டுரை அமைகின்றது….

10 வருடங்கள் போராட்டத்தில் தொடர்ச்சியாக என்னை அர்ப்பணித்த நான் பின்னர் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புணர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு தற்போது மட்டக்களப்பு களுவங்கேணி எனும் கிராமத்தில், வசித்து வருகின்றேன். போராட்ட காலத்திலும் கஸ்ட்டங்களை அனுபவித்து வந்த நான் தற்போது வீடு வந்து இயல்பு வாழ்வை மேற்கொண்டுள்ள நிலையிலும் பல சொல்லொணாத் துயரங்களை எதிர் காண்டுதான் வாழ்ந்து வருகின்றேன்.

நான்  வீடு வந்ததும் எனது குடும்பத்தாரும் பல கஸ்ட நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நான் என்.சி.ஐ.சி.ரி எனும் கணணி பயிற்சி, கணணி வரைபட பயிற்சி, போன்றவற்றைப் பூர்தி செய்தேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர் ஒருவர் எனக்கு அரச வேலை பெற்றுத்தருவதாகக்கூறி யாழ்ப்பாணத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் சிறிதுகாலம் அங்கு அவருடைய காரியாலயத்தில் பணிபுரிந்து நான் அரச வேலை கிடைக்காமல் மீண்டும் எனது கிராமத்தித்துத் திரும்பிவிட்டேன். 
எனது கிராமத்திலும் நான் தனிமையாக வாழ முடியாது முன்னாள் போராளியாக இருந்தலும்கூட நான் ஒரு பெண் என்ற காரணத்தினால் என்னால் தனிமையாக வாழ முடியவில்லை எனவே முன்னாள் போராளியான ஒருவரை திருமணம் செய்துள்ளளேன். எமக்கு 2 வயதுடைய ஒரு பெண் குழந்தை உள்ளது.

நான் புணர்வாழ்வழிக்கப்பட்டு வந்ததிலிருந்து இருதுவரைக்கும், அரசாங்கத்தினால் எனக்கு எதுவித உதவியும் கிடைக்கடிவில்லை. 

இந்திய அரசாங்கத்தின் ஐந்தரை இலெட்சம் ரூபாய் பெறுமதியான வீடு ஒன்று மாத்திரம் கிடைத்துள்ளது.  இதனைக்கூட முற்றுமுழுதாக பூர்தி செய்துகொள்ள முடியாத நிலையுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க கடந்த யுத்தத்தில் சிக்குண்டு அங்கவீனராகவுள்ளேன், எனது கணவரும் அதே போல் ஓர் விசேட தேவைக்குட்பட்டவராகவுள்ளார். ஆனாலும் எமக்கு நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் ஏதுமில்லை, வருமானமில்லாமல் மிகவும் இன்னல் படுகின்றோம்.  எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், ஆரசாங்கத்திடமும் நேரில் சென்று உதவிகள் பலமுறை கேட்டோம் யாரும் எமக்கு நேசக்கரம் நீட்டவில்லை. நாங்கள் யாரிடமும் கேட்டு நிற்பது எமது வாழ்வாதார ரீதியில் முன்னேறுவதற்கு உதவுங்கள் என்றுதான் வேண்டி நிற்கின்றோம். 

இலங்கையிலுள்ள எமது அரசியல்வாதிகள்தான் எமக்கு உதவ முன்வருகின்றார்கள் இல்லை. ஆனால் பல தனி நபர்கள் புலம்பெயர் எமது உறவுகளிடமிருந்து உதவிகள் பெற்றுத் தருகின்றோம் என எம்மிடம் வந்து எமது புகைப்படங்களையும், விபரங்களையும் திரட்டிச் சென்றுள்ளார்கள். அவர்களிடமிருந்தாவது எமக்கு எது வித பலனும்  இதவரைக் கிடைக்கவில்லை.

எனவே போராட்ட காலத்தில் புலம் பெயர் உறவுகள் எமக்களித்த உதவிகளை நாம் மறக்கவில்லை, மற்றக்கப் போவதுமில்லை. 

44000 ஆயிரம் போராளிகள் வீரச்சாவடைந்தவர்களைவிட தற்போது முன்னாள் போராளிகள் மிகவும் மோசமான நிலையிலிருந்து அங்கவீனர்களாகவும், இருந்து கொண்டு கஸ்டப்படுகின்றார்கள். தொழில் இல்லாப் பிரச்சனை, சமூகத்தினுள் உள்நுளையும் பிரச்சனை, முன்னாள் போராளி என்ற காரணத்திற்காக தற்போதும் பயந்து கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளார்கள். 

எனவே இப்பட்டிப்பட்ட எமக்கு புலம்பெயர் உறவுகள், அல்லது அவர்களின் பிரதிநிதிகள் எமது கிராமங்களுக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு, அல்லது ஊடகங்கள் வாயிலாக அறித்தாவது, முன்னாள் பெண் போராளிகளுக்குரிய தொழில் வாய்ப்புக்களையும், வாழ்வாதார உதவிகளையும், வீடற்ற பிள்ளைகளுக்கு வீட்டு வசதி வாய்ப்புக்களையும், ஏற்படுத்தி தரவேண்டும் என எதிர் பார்க்கின்றோம் 

முன்னாள் பெண் பேராளி ஒருவர் திருமணம் செய்ய முன்வரும்போது வீடு வசதிகள், சொத்து வசதிகள் இருக்கின்றனவா என பார்க்கப்படுகின்றன. காட்டிலிருந்து இனத்துக்காக போராடிய பெண்கள் வீட்டிற்கு வந்துள்ளபோது என்ன சொத்துக்கள் இருக்கும்? எனவே போராட்டகாலத்தில் புலம் பெயர் உறவுகள் உதவியது போன்று தற்போதும் எமக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கண்களிலிருந்து நீர் பொதும்பப், பொதும்ப, எம்மிடம் தெரிவித்தார், மட்டக்களப்பு களுவங்கேணி கிராமத்தில் வசித்திவரும் முன்னாள் பெண்போராளியான செ.வாசனா. 


காலச் சூழலில் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட வாசனா போன்றவர்கள் தற்போது இவ்வாறு வாழ்ந்து வருவதானது மிக மிக வேதனையான விடையமாகும். இவ்வாறானவர்களின் கண்ணீரைத் துடைக்க காலதாமதத்தினை ஏற்படுத்துவதும் ஓர் அனியாயமாகவே பர்க்கப்படுகின்றது, இந்நிலையில்…

1997 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்ட நான் போராட்டத்தினால் ஒரு காலை இழந்த நிலையில், வீடு வந்துள்ளேன். எனது கல்வித் தரத்திற்கு ஏற்றாற்போல் அரச சார்பற்ற அமைப்பு ஒன்றில் கடமை புரிந்து வந்த நான், இடை நடுவில் அந்த நிறுவனமும் இல்லாமல் போய்விட்டது. எனது தொழிலும், இழந்து போய் விட்டது.

எனது வாழ்து கேள்விக்குறியாகி நின்ற வேளையில் எனக்கு ஒரு கால் இல்லை என்பதை நன்றாக அறிந்திருந்தும் என்னை எனது கணவர் திருமணம் செய்து கொண்டார். 

எனது குடும்பத்தாருக்கும் மிகவும் கஸ்டம், என்னைத் திருமணம் செய்து வைக்கக்கூட வசதியில்லை. எமது கணவனின் குடும்த்தினருக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. இந்நிலையில் என்னைக் கரம் பற்றிக் கொண்ட கணவர்தான் எனக்கு கடவுள்.

எனது கணவனுக் எதுவித தொழிலும் இல்லை, எனது நிலமையினை நன்கு அறிந்தவர்கள், எனக்காவது ஏதாவது உதவிகளையோ அல்லது கைத்தொழில் வாய்ப்பு வசதிகளையே ஏற்படுத்தித் தரவில்லை. அரச சார்ப்பற்ற அமைப்பைச் சேர்ந்த பலர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ள நிலையிலும் இதுவரையில் எமது கையில் எந்த உதவியும் கிடைக்க வில்லை.

சுனாமி வீட்டுத்திட்டத்தில் எனது அம்மாவுக்கு வழங்கப்பட்ட வீட்டை தற்போது எமக்கு தந்துள்ளார். தற்போது 2 குழந்தைகள் எமக்கு உள்ளார்கள். நிரந்தரத் தொழில் இல்லாமலுள்ள எனக்கோ அல்லது எனது கணவருக்குகோ ஏதாவது உதவுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடம் போனால், உங்களுக்கு உதவ முடியாது என தெரிவிக்கின்றார்கள். இவர்களது பதிலை வைத்துக் கொண்டு ஏனையர்வர்களும் இவ்வாறுதான் கூறுவார்கள் என நினைத்துக்கொண்டு தற்போது யாரிடமும் நான் செல்வதில்லை. 

வட்டிக்கு பணம் வாங்கி மத்திய கிழக்கு நாடொன்றிற்கு எனது கணவர் தொழிலுக்குச் சென்றுள்ளார். அங்கேயும் அவர் பல இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றார். எனது 2 குழந்தைகளும் நாங்கள் பட்ட கஸ்ட்டங்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதைத்தான் நாம் எதிர் பார்க்கின்றோம். 

எனது வாழ்வையும், நான் படும் அவஸத்தைகளையும், பலர் நேரில் வந்து கண்ணுற்றுச் சென்றுள்ளனர் பின்னர் அவர்களை இப்பக்கமும் காணக்கிடைப்பதில்லை. இதுவரைகாலமும் அரசாங்கத்தினாலே, அரச சார்பற்ற  அமைப்புக்களினாலோ எதுவித உதவிகளும், எமக்குக் கிடைக்க வில்லை.

எனது இழந்த காலுக்கு பதிலாக பொய்க்கால் போடுவதங்குச் சென்றாலும், எம்மை சரியாகக் கவனிப்பதில்லை, கால் போடுவதற்காக ஒரு நாளைச் செலவு செய்ய வேண்டியுள்ளது, 6 வருடங்களாய் தற்போது கால் மாற்றாமலுள்ளே. என கண்ணீர் மல்க தனது மனக் கிலேசத்தைக் கொட்டித் தீர்க்கின்றார் முன்னாள் பெண் போராளியான சி.லலிதா 

லலிதாவின் வயதுடைய பெண் பிள்ளைகள் தற்போது கற்றலில் சிறந்து விழங்கும் இக்காலத்தில் லலிதா போன்றவர்கள் தமிழினத்திற்காக தன்னை நூறுவீதம் அர்ப்பணித்துள்ளார். போராட்டம் என்பது ஆரம்பிக்கப் படாமலிருந்திருந்தல் அவர் ஓர் சிறந்த கல்விமானாக மிளிர்நிதிருக்க முடியும். காலத்தின் கட்டாயம் லலிதா போன்ற பெண்பிள்ளைகளை போராட்டம், இழுத்துள்ளது எனலாம்.

முன்னாள் பெண் போராளியான நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வீடு வந்தபோது எனது கிராமம மிகவும் வறுமையான நிலையில் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. ஓலைக் குடிசையுடன் வாழ்ந்து வந்த எனது பெற்றோரின் குடும்பம் உட்பட கிராமம் ஓரளவு சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னர் தற்போது மிளிர்கின்றது. ஆனாலும் எமது கிராமத்திற்கு வரும் பிரதான வீதி குன்றும் குளியுமாகவுள்ளது. இதிலிருந்து வரும் தூசிகள் படிவதனால் பல சுகாதாரப் பிரச்சனைகளையும், நாம் எதிர்  கொண்டு வருகின்றோம். பலர் எமது கிராமத்திற்கு வந்து செல்கின்ற போதிலும், இன்னும் எமது கிராம மக்கள் அடிப்படை வசதிகள் பூர்தி செய்து கொள்ளாத நிலையில்தான் வாழ்ந்து வகின்றார்கள். எமக்கு “வோட்டைப் போடுங்கள் நாங்கள் உங்களுக்கு றோட்டைப்போடுவோம்”  என எம்மிடம் தேர்தல் காலத்தில் கருத்து தெரிவித்தது வந்த அரசியல்வாதிகள் தற்போது அக்கறை செலுத்துவது குறைவாகத்தான் உள்ளது.

தமிழ் அரசியல் வாதிகளின் கதைககளைக்கேட்டு புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்குமாறு பல எம்மிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க நாம் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தோம். தற்பாது புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் எமக்கு என்ன தேவை என இதுவரையில் யாரும் எம்மிடம் வந்து கேட்கவில்லை. “எமது தமிழ் மக்களின் சரியன தேவைகளை தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை”.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தந்போது சமூகத்திலுள்ள எமக்குரிய தேவைகள் என்ன? என்றுகூட இதுவரையில் எந்த மக்கள் பிரதிநிதிகளும் கேட்கவில்லை. மிகவும் கௌரவத்துடன் அப்போதைய காலகட்டத்தில் வாழ்ந்த எம்மை சில கால நேரம் வரும்போது எமது கிராமமே எம்மீது வெறுப்பில் இநிற்கும். அப்படியான சூழல்தான் தற்போதும் காணப்படுகின்றது.

வீட்டிலிருந்து இயக்கத்தில் இணையும்போது கௌரவத்தோடுதான் இருந்தோம், இயக்கத்திலிருந்து வீடு வந்து சேரும் வரைக்கும், மிகவும் கௌரவத்தோடும், மரியாதையோடும்தான் வந்தோம். ஆனால் எம்மை இவர்கள் இயக்கத்திலிருந்தவர்கள் என்ற தப்பான பார்வையில் பார்க்கும் சமூகமும் தற்போதும் உள்ளது. எமது முன்னாள் பெண்போராளிகளுக்கு சிலர் அவதூறாக பேசும்போது எமது உடம்பு கூசுகின்றது. அந்த அளவிற்கு கதைக்கின்றார்கள். இவற்றையெல்லம் கேட்டும்போது மிக மிக வேதனையாகவுள்ளது. ஆனால் நாம் ஒழுங்கத்துடன் வளர்க்கப்பட்டவர்கள், அன்றும் இன்றும் ஒழுக்கத்துடன்தான் இருக்கின்றோம்.

நான் தற்போது திருமணம் செய்துள்ளேன் எக்கும் தொழில் இல்லை எனது கணவருக்கும் தொழில் இல்லை, மாலை வேளைகளில் பெட்டிக்கடை வைத்து கிளங்கு, கடலைகளை நான் விற்று வருகின்றேன். இவற்றினைவிட அடிப்படைச் சுகாதாரம் தொடர்பிலான பல பயிற்சிகளையும், பெற்று ரீ.டி.எச். எனும் அமைப்பிலும் சுகாதாரத் தொண்டராக கடமை புரிந்து அனுபவம் எனக்கு உள்ளது. ஆங்கில அறிவு இல்லத எனக்கு இயக்கத்திலருந்போது ஆங்கிலம் கற்றேன் தற்போது ஆங்கிலத்திலும் சகல வேலைகளையும் மேற்கொள்ளும் திறன் என்னிடம் உள்ளது. அரச வேலைகளுக்கு விண்ணப்பித்தால் கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சை சாண்றிதழ் கேட்கின்றார்கள், நான் சாதாரணதரம் வரைப் படிக்கவில்லை.  அரச வேலைதான் எனக்கு பெற்றுத்தராவிட்டாலும், சுயதெரில் செய்வதற்காக வேண்டியாவது எமக்கு யாராவது உதவுவார்களா?

இதுபோல் பலரிடம் நான் எனது சோகக் கதைகளை எடுத்தியம்பியுள்ளேன், ஆனாலும் யாரும் கடைக்கண்ணால்கூட பார்க்கவில்லை, தற்போது வந்துள்ள உடகவியலாளர்களாகிய உங்களிடம் எடுத்துரைக்கின்றேன் இவற்றினை உலக்குக் எடுத்துக்காட்டி வெளிநாட்டு அரசாங்கங்களிடமோ, அல்லது புலம்பெயர் உறவுகளிடமிருற்தோ எமக்கு உதவிகள் கிடைக்க வழிசெய்யுங்கள். என்னைப்போலவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பெண்போராளிகள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றாரகள் என அவரது மனக் கிலேசத்தை எம்மிடம் மிகவும் தெழிவாக எடுத்தியம்பினார் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியான த.ரூபவதி.


இவ்வாறானவர்களுக்கு அரசாங்கமோ அல்லது அரச சார்பற்ற சர்வதேச அமைப்புக்களோ விசேட செயற்றிட்டங்களை அமுலப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவராலும் எதிர்பார்க்கப் படுகின்றவிடயமாகும். 

இ.தவராணி ஆகிய நான் 9 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்துள்ளேன் எனக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை, எனக்கு ஒரு சகோதரி மாத்திரம் உள்ளார். அவரும், திருமணம் செய்துள்ளார். எனக்குரிய காணித்துண்டு ஒன்று மாத்திரம் உள்ளது. ஆனால் வீடு இல்லை. எனது சகோதரி குடும்பமாகிவிட்டாள் என்பதங்காகவும், நான் அவர்களின் குழும்மபத்திற்கு ஒரு சுமையாக இருக்கக் கூடாது என்பதாற்காக கொக்கட்டிச்சோலையிலுள்ள எனது நண்பி ஒருவரின் வீட்டில் வசித்து வருகின்றேன். 

எனக்கென்று ஒரு சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை, எனகெண்று ஓர் வீடாவது இருக்குமானால் நானும் குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டு வாழலாம் எனக்கு இருப்பதற்கும் வீடற்ற நிலையில்தான் அங்கும் இங்குமாக அலைந்த திரிகின்றேன். 

எதுவித சுயதொழில் இல்லாமலும், வருமானமும் இல்லமலுள்ள எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் என்னிடம் இருந்த வருகின்றது. “இலங்கை இராணுவதிலிருந்து வெளியேறியவர்களுக்கு, அரசாங்கம் பல உதவிகளைச் செய்வதாக அறிகின்றேன் ஆனால் எம்மைப்போன்வர்களைக் கவனிக்க யாரும் இல்லை” , தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலருந்து வீடு வந்துள்ள முன்னாள் போராளிகளையும், அரசாங்கமும், ஏனையவர்களும்,  கவனிக்க வேண்டும். 

கடந்த வருடம் வீடு வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலில் எனது பெயரும் உள்வாங்கப் பட்டிருந்தது. ஆனால் நான் ஒரு தனி நபர் என்ற காரணத்தினால் எனது பெயரை அதிலிருந்து நீக்கிவிட்டார்கள்.  இவ்விடையம் தொடர்பில் பிரதேச செயலகத்தில் 3 தடவைகள் கடிதம் கொடுத்துள்ளேன் அதற்கு இதுவரையில் எதுவித பதிலும் கிடைக்க வில்லை.

என்னைப் பெறுத்தவரையில், நான் விருப்புடன் இயக்கத்தில் சேரவில்லை, கட்டாயத்தின் பேரில்தான் என்னை இணைத்துக் கொண்டார்கள். வீடு வந்ததும் என்னை சமூகம் ஓர் வித்தியாசமான பார்வையளில் நேக்கியது… தற்போது அது படிப்படியாகக் குறைந்துள்ளது.  எனது வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயத் தழும்புகளுடன் வாழ்ந்து வரும் எனக்கு ஆஸ்த்துமா வருத்தமும் உள்ளது. எனவே சம்மந்தப் பட்டவர்கள், எனக்கு ஓர் சுயதொழில் உதவிகளையும், வீட்டு சநதியினையும், எற்படுத்தி தருவார்களா? என எதிர் பார்க்கின்றேன். என்பதோடு “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தற்போதும் சிறைகளில் வாடுகின்றவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். என ஏங்குகின்றார்”

ஏனைய பெண் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதி வாயப்புக்களோடும் வாழ்வை நடாத்துகின்ற இக்காலகட்டத்தில், இனத்திற்காக தம்மை அர்ப்பணித்த இவ்வாறான பெண்களை ஏறெடுத்தும் கவனிக்காமலிருப்பது மிகப்பெறிய தவறாகும். எனக் கூறிக் கொள்வதில் எதுவித தவறும் இருக்க முடியாது.

இவர்களின் கருத்துக்கள் இவ்வாறு அமைகின்றபோதில் முன்னாள் பெண் போராளியை திருமணம் செய்துள்ள முன்னாள் ஆண் போராளியான செவ்லேவந்திரராசா குறிப்பிடுகையில்….. 

போராட்டத்தில், எனது மனைவிக்கு ஒரு பக்க கை பாதிப்படைந்துள்ளது, அத்தோடு நெஞ்சுப் பகுதியிலும் வெடிக்காயங்கள் உள்ளன. எனக்கு ஒரு பக்க கால் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே நானும் எனது மனைவியும், விசேட தேவைக்குட்பட்ட வலது குறைந்தவர்களாகவுள்ளோம். யாப்பாணத்தைச்  சேர்ந்த நான் தற்போது மட்டக்களப்பில் குடும்பமாகி வாழ்ந்து வருகின்றேன். 

இன்று வரையில் தமிழ் அரசியல் வாதிகளோ அல்லது அரச தரப்பினரோ யாராவது வந்து எம்மை பார்த்தும் இல்லை, எதுவித உதவிகளும் செய்ததுமில்லை. அப்போதைய காலகட்டத்தில் எம்மால் இயன்ற உதவிகளை எம்மினத்திற்கு மேற்கொண்டு வந்தேன் தற்போது எம்மால் முடியாதுள்ளது. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக எம்மைப் போன்றவர்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பது தொரியாதுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சில அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றார்கள் எம்மினத்திற்காக பாடுபட்ட எம்மைப்போன்றவர்களுக்கு, உதவ வேண்டும் என்று ஆனால் இதுவரையில் ஆனது ஒன்றுமில்லை.

இந்திய அரசாங்கம் வீடு ஒன்றை எமக்குத் தந்துள்ளது. அதுவும் பூரணப்படுத்தப்படாமல், அரைகுறையாகவுள்ளது. ஆனால், இலங்கை அரசு ஒரு செங்கல்கூட வாங்கித் தரவில்லை. 

வலது குறைந்தவர்களாக்க காணப்படும் எமது குடும்பதிற்கு யாராவது சிறியதொரு வாழ்வாதரரீதியான தொழிலுக்கு உதவிசெய்தால் மிக வரப்பிரசாதமாக அமையும்.
கடந்த காலத்தில் எமக்கும், எமது மக்களுக்கும் புலம் பெயர் உறவுகள் பணத்தினை அள்ளி இறைத்தார்கள், தற்போது அவர்கள் எமக்கு உதவுவதற்கு அவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்றால் எம்மைப் போன்றவர்களை காரணம் காட்டி சிலர் இலாபம் அடைந்து கொண்டு சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள் இதுதான் உண்மை. எனவே எம்மோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு உலம்பெயர் உறவுகள் எமக்கு உதவ வேண்டும் என நான் எதிர் பார்க்கின்றேன். எனத் தெரிவிக்கின்றார்.

முன்னாள் பெண் போராளிகளை முன்னாள் ஆண் போராளிகளே திருமணம் செய்து குடும்பமே வலது குறைந்தவர்களாக வாழ வசதியற்றுக் காணப்படும் இந்நிலையை ஏனையவர்களும், அறிந்திருக்க வேண்டியதும்,  இவர்களுக்கு, உதவுவதற்கு உந்து சக்தியளிப்பதுவும், காலக்கண்கூடு…

தமிழீழ விடுதலைப் புரிகள் இயக்கத்திலிருந்து சமூகமயப்படத்தப்பட்டுள்ள முன்னாள் பெண் போராளிகளி; தற்போதைய நிலை தொடர்பில் சமூக ஆர்வலர் ரமேஸ் கருத்து தெரிவிக்கையில்…..

கடந்து யுத்த சூழலுக்குள் அகப்பட்ட அவர்கள்  அங்க அவையங்களை இழந்த நிலையில், பாதிப்படைந்துபோன நிலையில்தான் தற்போது வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு சிலருக்கு இந்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி கிடைத்துள்ளது பலருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் எவருக்குமே தகுந்த வாழ்வாதார ரீதியான உதவிகள் எதுவும் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் அவர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபதித்து வருகின்றார்கள்.

எனவே வெளிநாடுகளிலுள்ள எமது உறவுகள் எமது பெண் முன்னாள் போராளிகளாகவுள்ள வலுவிழந்தவர்களுக்கு, வாழ்வாதார ரீதியில் உந்து சக்தியழிக்க முன்வரவேண்டும். இவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதைவிட நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உதவிகளையேதான் வேண்டி நிற்கின்றனர். எனத் தெரிவிக்கின்றார்.


தற்போதைய இயந்திர உலகில், அதிக வருமானம் கிடைப்பவர்களும், வாழ்வைக் கொண்டு நடாத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்ற இந்நிலையில் எதுவித தொழில்களும் அற்ற நிலையிலும், அதுவும், வலது குறைந்தவர்களாக இருந்து கொண்டு எவ்வாறு குடும்பத்தைக் கொண்டு நடாத்துவது எனச் சிக்கித் தவிக்கும் இவ்வாறான முன்னாள் பெண் போராளிகளுக்கு அரசாங்கமும், அல்லது தனிநபர்களும், இதுவரையில் முன்வதார காரணத்தினால் சர்வதேச அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் உறவுகள், தனவந்தர்கள், போன்றோராவது, இனிமேலாவது இப்படிப் பட்டவர்கள் மீது அக்கறை செலுத்த முன்வரவேண்டும் என்பதையே எதிர் பார்க்கின்றோம்.  








SHARE

Author: verified_user

0 Comments: