வாழைச்சேனை பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்த தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி புதன்கிழமை மாலை விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது.
இதன் போது ஆலய குரு சிவஸ்ரீ.எஸ்.தயானந்த சர்மாவினால் விஷேட அபிஷேகப் பூசைகள் என்பன இடம்பெற்றதுடன், ஆலயத்தில் உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.
இங்கு கலந்து கொண்டவர்களால் ஈகச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment