அமெரிக்காவின், பசுபிக் கட்டளைக்கான மூலோபாயத் திட்டமிடல் மற்றும் கொள்கைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ரடர், மே 11-13 காலப்பகுதியில் இலங்கை;கான தமது மூன்று
நாட்கள் விஜயத்தை நிறைவு செய்தார்.
பசுபிக் கட்டளை தலைமையகத்தின் சிரேஸ்ட தலைவர் ஒருவர்
இலங்கைக்கு விஜயம் செய்வது, இதுவே முதற் தடவையாகும்.
அண்மையில் இலங்கை துறைமுகத்தில்
நங்கூரமிட்டிருந்த அமெரிக்காவின் ஏழாவது படையணியின் யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் கப்பல் விஜயத்தின் தொடர்ச்சியதாக இந்த விஜயம் அமைந்தது.
“இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய அமைவினைப் பார்க்கும் போது, கடற்பாதுகாப்பினை உறுதி செய்வதில், இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதில் மற்றும் சுதந்திரமான கடற்பயணத்தை பாதுகாப்பதில் பிராந்திய முயற்சிகளின் பிராதான பங்காளராக அது உள்ளது” என இலங்கை மற்றும்
மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகளின் தளபதி மற்றும் தளபதிகளை மேஜர் ஜெனரல் ரடர் சந்தித்தார். மேலதிகமாக, கொள்கலன் சரக்குகள் கப்பலில் ஏற்றப்படும் துறைமுகளில் உலகின் 14 வது பரபரப்பாக இயங்கிக்
கொண்டிருக்கும் கொழும்புத் துறைமுகத்தை அணுகும் கடல்வழிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பான மேற்குப் பகுதி கடற்படை தளபதியையும் அவர் சந்தித்தார். கடற்பாதுகாப்பு, மனிதநேய உதவி மற்றும்
அனர்த்த நிவாரணம் போன்ற முக்கியமான விடயங்களிலும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளிலும் (UN PKO) எதிர்கால ஒத்துழைப்புக்கான அம்சங்களினை கண்டறிவது இந்த விஜயத்தின்
நோக்கமாக இருந்தது.
தற்போது லெபனான், தென் சூடான மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு வழங்கி வரும் படையினருக்கு மேலதிகமாக (UN PKO) இற்கு மேலும் ஆதரவு வழங்குவதற்கு இலங்கை இராணுவம் அண்மையில் வாக்குறுதி அளித்துள்ளது.
0 Comments:
Post a Comment