ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் இருந்த கிராமங்கள் சிலவற்றை ஏறாவூர்ப் பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுடன் இணைக்கும் நடவடிக்கை இடம்பெற மாட்டாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் செவ்வாய்க்கிழமை 17.05.2016 விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் நிருவாகத்திலுள்ள மிச்நகர், மீராகேணி, ஐயங்கேணி போன்ற கிராமங்களை ஏறாவூர்ப்; பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுடன் இணைப்பது என்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை.
இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக மாகாண சுகாதார அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டதற்கு அமைவாக, மேற்படி கிராமங்கள் தொடர்ந்தும் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என உத்தரவாதமளிக்கப்படுள்ளது.
கடந்த 25 வருடங்களாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் நிருவாகத்தின் கீழ் உள்ள இந்த கிராமங்களை ஏறாவூர்ப் பற்று சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுடன் இணைப்பதற்கான எந்த வித தேவைப்பாடும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment