8 May 2016

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு ஊடகவியலாளர்களுக்கு நடாத்திய பயிற்சி செயலமர்வு .

SHARE
(டிலா )

அம்பாைறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அக்கரைப்பற்று அலுவலகம் நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான சட்டம், உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி செயலமர்வு (08.05.2016) தற்போது சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இலங்கையில் ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள், ஒழுக்க நெறிகள், செய்திகளை சேகரிப்பது - வெளியிடுவது தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
இலங்கையின் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் 40 க்கு மேற்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பிரதான வளவாளராக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் முழுவில் கடமையாற்றும் எம்.எஸ்.அமீர் ஹூசைன் கலந்து கொண்டு விளக்கமளித்தார். சட்ட உதவி ஆணைக்குழுவின் அக்கரைப்பற்று அலுவலகத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.சுபாஹிர், சட்ட ஆலோசகர்களான எம்.எச்.எம்.ஹசான் றுஸ்தி, ஏ.ஜெ.எம்.நஸீம், எல்.கலைவாசனா, நிகழ்ச்சித் திட்ட அலுவலகர் பி.எம்.கலாமுத்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: