5 May 2016

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதனை

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் வியாழக்கிழமை 05.05.2016 காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர், உபாலி ஜயசிங்ஹ பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கொண்டதுடன் பொலிஸாரிடம் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.

ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்தின, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் இந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: