மட்டக்களப்பு வாழைச்சேனையில் புதுவருடத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) உரையாற்றிக் கொண்டிருக்கையில் இளைஞர் ஒருவர் இடையூறு விளைவித்தைமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டள்ள கண்டனத்தில்,
வாழைச்சேனையில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) உரையாற்றிக் கொண்டிருந்த போது நடைபெற்ற முறைகேடான சம்பவத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் அனைவரும் கண்டிக்கிறோம்.
இப்படியான சம்பவங்கள் எமது ஆதரவாளர்களை உணர்ச்சிவயப்படுத்தி அவர்களை தவறான பாதைக்குத் திசை திரும்பச் செய்யலாம் என்பதையும், எனவே விபரீதமான செயல்களுக்கு வழிகோல வேண்டாம் வினயமாக ஆலோசனையாகக் கூறுகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ம் திகதி நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு இளைஞன், அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அவர் அந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கையில் நபர் ஒருவர் இடையூறு செய்து வன்முறை ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டார்.
இச் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான நி.இந்திரகுமார், க.கிருஸ்ணப்பிள்ளை, மா.நடராசா, கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம் ஆகியோர் கூட்டாக இணைந்து ஒப்பமிட்டு இக் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
குறித்த இடையூறு விளைவித்த சம்பவத்தினை தவறான முறையில் சிலர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment