7 May 2016

சோனகர் சங்கத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கது -பிரதேச செயலாளர் தெரிவிப்பு.

SHARE

(டிலா )

சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையின் செயற்பாடு பாராட்டத்தக்கது என பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார்.

அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ( 2016.05.04) கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.இங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
சோனகர் சங்கம் 'சோனகர்' என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழ் சகோதரர்களுக்கு உதவுவது பாராட்டுக்குரியதாகும். கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முஸ்லிம் கிராமங்களுக்கும் சேவையாற்றி வருகின்றது. இந்தப் பிரதேச செயலகம் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை போன்ற முஸ்லிம் கிராமங்களையும் உள்ளடக்கியதாகும். எமது பிரதேச செயலகத்தில் வசதி குறைந்த மாணவர்கள், தாய் தந்தையை இழந்த மாணவர்கள் பலர் உள்ளனர். எதிர்காலத்தில் இன்னும் உங்கள் சேவைகள் கிடைக்க வேண்டும் எனவும் கூறினர். பிரதேச செயலாளர் கே.லவநாதன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன், நிருவாக உத்தியோகத்தர் ஆர். கனேசமூர்த்தி, கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தவராஜா, சங்கத்தின் தலைவர் ஏ.கையூம், ஆலோசகர் ஏ.எல். மீரா முகையதீன், எஸ்.சி.ஏ.எஸ். இப்றகீம், எம்.எச்.எம்.நஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: