வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கெக்குலு சிறுவர் கழக கலாசாரப் போட்டி நிகழ்வுக்கு பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
போட்டி நிகழ்ச்சிகளாக தனிநபர் பாடல்இ நாட்டார் பாடல்இ கிராமிய நடனம்இ குறவர் கூத்துஇ காவடியாட்டம்இ கோலாட்டம்இ அறிவிப்பாளர்இ பேச்சுஇ ஓவியம் வரைதல், சிறுகதைஇ சிறுநாடகம், ஆகிய தலைப்புக்களில் ஆரம்ப நிலைஇ இடைநிலைஇ உயர் தர மாணவர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற முடியும்.
விண்ணப்ப படிவங்கள் போட்டி நிபந்தனைகள் அடங்கிய அறிவுறுத்தல்களுடன் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து பாடசாலை அதிபர்களின் உறுதிப்படுத்தலுடன் பிரதேசத்திலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள வங்கி முகாமையாளர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்குமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment