25 May 2016

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு ஸ்ரீநேசன் (பா.உ) கண்டனம்

SHARE
(பழுவூரான்)

2016.05.24 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரை தாக்கிய சம்பவம் குறித்து மட்டக்களப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது அன்றைய நிகழ்வு பற்றி நான் ஊடகவியலாளருக்கும்¸ மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாட்டில் இருக்கின்றேன். கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
நேற்று தமிழ் மாணவன் ஒருவன் தாக்கப்பட்டு இருக்கின்றான். இந்த மாணவனை தாக்குகின்ற செயல்பாட்டில் பிற்போக்குவாத பேரினவாத எண்ணம் சிந்தனையுடைய சில மாணவர்கள்  ஈடுபட்டு இருகின்றார்கள். எல்லோரும் இதில் ஈடுபடவில்லை. சிலர் ஈடுபட்டதாக அறியக்கூடியதாக உள்ளது. 

இந்த மாணவன் தாக்கப்பட்டதற்கான காரணம்¸ என்னவென்று ஆராய்கின்ற போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு¸ அதாவது முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்து போன தமிழ் உறவுகளை நினைவுபடுத்தக் கூடிய விதத்தில்¸ தங்களது மனதில் உள்ள வேதனையை வெளிப்படுத்த கூடிய விதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாட்டின் பல பாகங்களிலும் நடை பெற்று இருக்கின்றது. அந்த வகையில் யாழ்ப்பான பல்கலைக்கழகம்¸ முள்ளிவாய்கால்¸ கொழும்பு¸ பல ஆலயங்கள் போன்றவற்றில் வேதனையோடு நினைவு கூறப்பட்டு இருகின்றது. இந்த அடிப்படையில்தான் கிழக்குப் பலைகலைக்கழகத்தில்¸ வேதனையோடு யாருக்கும் இடையுறு செய்யாமல் இவ் வேதனையான நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத பிற்போக்கவாத உணர்வு கொண்ட மாணவர்கள் சிலர் இந்த குறித்த தமிழ் மாணவனை தாக்கி இருக்கின்றார்கள். 

தாக்கியதன் விளைவாக மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிகின்றோம். இது சம்பந்தமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தற்போதைய பணியாற்றுகின்ற பதில் உபவேந்தர் டாக்டர். கருணாகரன் அவர்கள் வைத்தியச்சாலைக்குச் சென்று அம் மாணவனை பார்த்ததாக அறியக்கூடியதாக இருந்தது. கடந்த காலங்களில் ஒரு வித காட்டாட்சி நடை பெற்று வந்தது. அதில் மீண்டு மக்கள் நல்லாட்சியில் சென்று கொண்டிருக்கும் போது¸ இன சமத்துவம் பேணப்பட வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். இந்த நிலையில்¸ நாங்கள் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள இடம் பெறுகின்றன. முந்தியும் ஒரு தடைவை இப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தேசிய கீதத்தினை தமிழில் பாடிய மாணவர்கள் இவ்வாறான பேரீனவாத மாணவர் கூட்டத்தினால் தாக்கப்பட்டு இருக்கின்றார்கள். சொந்த மொழியில் தேசிய கீதம் பாடும் போது தான் அதன் அர்த்தம்¸ பொருள் உணர்ந்து அதில் ஈடுபாட்டுடன் பாடக்கூடியதாக இருக்கும்.

அத்துடன¸; மாற்று மொழியில் பாடும் போது அவ் உணர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே தான் சொந்த மொழியில் பாடிய போது தான் அங்குள்ள பிற்போக்குவாதமான இன அடிப்படைவாத மாணவர்களால் தாக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதே போல்தான் இந் நிலையை பார்க்கும் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு சார்த்வீகமான முறையில் நினைவு கூர்ந்த போது¸ தாக்கி இருக்கின்றார்கள். இம் மக்களின் மத்தியில் வேதனையையும் மற்றும் கோபத்தையும் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாக காணப்படுகின்றது. இவ்வாறான நிகழ்வு தொடர்ந்து இடம்பெறும் போது இதனை எதிர்க்கும் போக்கு மாணவர்கள் மத்தியில் இடம் பெற கூடிய நிலைமை ஏற்படக்கூடியதாக இருக்கும். எனவே பல்கலைக்கழக நிர்வாகமும்¸ உயர்கல்வி அமைச்சும்¸ இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் இந்த விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து இவ் விடயத்தினை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். மாறாக இவ்வாறானவர்கள் செய்யும் வன்மமான விடயங்களை கண்டும் காணாம விடும் போது தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்வுகள் அதிகமாக பல்கலைக்கழகங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்லும் போது கிழக்கு பல்கலைக்கழகம் என்பது¸ தமிழ் பேசும் சமூகத்தினர் வாழுகின்ற இடத்தில் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகம் இந்த பல்கலைக்கழகத்திலேயே இவ்வாறான நிகழ்வு இடம் பெற்றதால்¸ தென் பகுதியில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் எவ்வாறு நடக்கும் என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக் வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆக நான் கூறக்கூடிய விடயம் என்னவென்றால்¸ உயர்கல்வி பீட்ம் என்பது புத்திஜீவிகளை¸ புத்திசாலிகளை உருவாக்குன்ற ஒரு நிலையமாக இருக்கின்றது. இந் நிலையங்களில் சகிப்பு தன்மை¸ பகுத்தறிவுத் தன்மை¸ பக்குவமான போக்கு¸ முற்போக்கான சிந்தனை இருக்க வேண்டும். இதனை விடுத்து இவ் விடங்களில் பிற்போக்கு வாதம¸; அடிப்படைவாதம்¸ பழமைவாதம் என்பன அரங்கேற்றப்படும் போது மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். எனவே மீண்டும் கூறக்கூடியது என்னவென்றால்¸ குட்டக் குட்ட குனிகின்றவர்களை மடையவர்களாக நினைத்து இருக்க கூடாது. கடந்த காலங்களிலும் இப்படிப்பட்ட விடயங்கள் இடம் பெற்றதால்தான் சார்த்வீகமாக இருந்த தமிழர்களின் அரசியல் அணுகு முறைகள் பின்னர் ஒரு வன்முறை கலாசாரத்தை நோக்கி¸ போராட்டத்தை நோக்கி போவதற்கு இதுதான் காரணமாக அமைந்திருந்தன.

எனவே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உயர்புத்தி சாதுரியத்தை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்பதை நாங்கள் அறிவுரையாக கூறிக்கொள்கின்றோம். எந்தவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முறையில் சுதந்திரம் காணப்படுகின்றது. இச் சுதந்திரத்தினை மிதித்து நடக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம். பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமாக இருக்க வேண்டுமே ஒழிய ஒரு இனத்தவரை இன்னொரு இனத்தவர் அடக்குவது¸ மிதிக்கின்ற தமது ஆளுகைக்குள் கொண்டு வருகின்ற ஒரு சமத்துவம் இல்லாத நிலைமைக்கு கொண்டு வருகின்ற இடமாக அமையக்கூடாது எனவே இதற்குறிய நடவடிக்கையை உரிய நேரத்தில் மேற்கொண்டு குற்றவாளிகள் உரியவாறு தண்டிக்கப்பட்டால்தான் இவ்வாறான குற்றச்செயல்கள் இடம் பெறாதவாறு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. 

எனவே¸ இவ் விடயத்ததை நான் வன்மையாக கண்டிப்பதோடு¸ இவ்வாறான சூழ்நிலை ஏற்படாதவாறு இருப்பதற்கு பல்கலைக்கழக உயர்கல்வி அமைச்சு¸ நல்லாட்சி அரசாங்கம் போன்றவை அக்கறையோடு செயற்பட வேண்டும். ஊடகவியலாளர்களும் இவ் விடயத்தினை பொறுப்புணர்ச்சியுடன் கையாண்டு ஒரு சமரசமான நிலை உருவாகுவதற்கு உரிய நிலைப்பாடுகளை ஏற்படுத்த முனைய வேண்டும்.
SHARE

Author: verified_user

0 Comments: