கல்முனை நீதிவான் நீதிமன்றத்தின் அழைப்பாணைக்குச் சமுகமளிக்காது தலைமறைவாகியிருந்த நபரைத் தாம் புதன்கிழமை 11.05.2016 கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீதிமன்ற அழைப்பாணைக்குச் சமுகந்தராது மறைந்திருந்த காரணத்தினால் கல்முனை நீதிவான் நீதி மன்றத்தினால் பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வேளையில், தகவல் ஒன்றின் அடிப்படையில் கல்முனை சுனாமி வீட்டுத் திட்டத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஷாஹ{ல் ஹமீட்-முஹம்மத் நஸார் (வயது 40) என்பரை பொலிஸார் புதன்கிழமை கைது செய்தனர். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment