மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி சிங்காரத்தோப்பு எனும் கிராமத்திலுள்ள வேப்ப மரம் ஒன்றிலிருந்து ஞாயிறு காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய சிங்காரத்தோப்பைச் சேர்ந்த விஜயரெட்ணம் மகேஸ்வரன் என்று அவரது மனைவி அடையாளம் காட்டியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கூலித் தொழில் செய்யும் தனது கணவர் சனிக்கிழமை இரவு வீட்டை விட்டுப் போயிருந்தார் என்று மனைவி பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார். பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment