மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி கிராமத்தில் ஆளில்லாத தருணம் பார்த்து வீடு புகுந்த நபர் அங்கிருந்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தைச் திருடிச் சென்றுள்ளதான முறைப்பாடு தமக்குக் கிடைத்திருப்பதாக வெள்ளிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்தைப் பறிகொடுத்தவரான முஹம்மது ஹனீபா மர்ழியா என்பவரே தனது வீட்டில் பணம் திருடப்பட்டுள்ளமை பற்றிய முறைப்பாட்டை ஏறாவூர் பொலிஸில் பதிவு செய்தள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது முன்பள்ளி ஆசிரியையான தான் வழமை போன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு முன்பள்ளிக்குச் சென்று விட்டு பாடசாலை கலைந்து 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கூரையினால் வீட்டிற்குள் நுழைந்து பணம் திருடப்பட்டிருந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment