கிழக்கு முதலமைச்சரின் சொந்த நிதியிலிருந்து விஷேட செயற்திட்டத்தின் கீழ் உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய காரியாலயம் அறிவித்துள்ளது.
இதன்படி க.பொ.த. உயர்தர விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக விஷேட செயற்திட்ட வகுப்புக்கள் செவ்வாய்க்கிழமை 10.05.2016 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
2016, 2017 க.பொ.த. உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளில் தேசியப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்து மருத்துவம், பொறியியல் மற்றும் அதனோடு இணைந்த ஏனைய பிரிவுகளுக்கும், பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்களின் தொகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும்போது கூறினார்.
இதற்கென கணித விஞ்ஞானத் துறைகளில் சிரேஷ்ட நிபுணத்துவமிக்க ஆசிரியர்களால் விரிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ், பிரதேச இணைப்பாளர் யூ.எல். முஹைதீன்பாவா உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment