7 May 2016

கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் வடக்கிற்கான தலயாத்திரை

SHARE
கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டடில்  மண்டூர் இந்து சமய மறுமலர்ச்சிக் கழகத்தினை அனுசரணையில் கிழக்கிலிருந்து வடக்கிற்கான தல யாத்திரை விஜயம் ஒன்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமய சமூகச் செயற்பாடுகளில் மற்றுமொரு செயற்பாடாக கிழக்கிலுள்ள இந்து சமய மன்றங்களை அழைத்துச் சென்று நாட்டிலுள்ள பிரபல இந்து ஆலய தரிசன வழிபாட்டுச் செயற்பாட்டின் முதலாவது கட்டம் வெள்ளிக் கிழமை முன்னெடுக்கப்ப பட்டுள்ளது.

கிழக்கில் சின்னக் கதிர்காமம் என போற்றப்படும், மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்ட இக்குழுவினர் வடக்கிலுள்ள வற்றாப்பளை, நல்லுர், மாவிட்டபுரம், நயினை தீவு, திருக்கோதீஸ்வரம், போன்ற பல இடங்களில் அமைந்துள்ள பிரபல இந்து ஆலயங்களுக்குச் சென்று தரிசனங்களில் ஈடுபட்டனர்.

மக்களிடையே இறை பக்தியையும், பஜனை வழிபாடுகளையும், சமூக சேவையையும், வளர்க்கும் பட்சத்தில், வீண் பிரச்சனைகள், கலாசார சீர்கேடுகள் தலைதூக்காது. இந்நிலையில்தான் நாம் படிப்படியாக கிழக்கிலுள்ள கிராமங்கள் தேமாறும், அமைந்துள்ள இந்து மன்றங்களை நாட்டின் நாலா பாகமும் அமைந்துள்ள பிரபல்யமான இந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடும் செயற்பாடுகளையும், முன்னெடுத்துள்ளோம் என கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையின் தலைவர் த.துஷியந்தன் இதன்போது தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (06) மண்ரூரிலிருந்து இக்குழு ஞாயிற்றுக் கிழமை (08) வட பகுதியிலுந்து திரும்புகின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: