30 May 2016

அபிவிருத்திகளை மக்களின் காலடிக்குக் கொண்டு செல்வதே கிழக்கு மாகாண சபையின் நோக்கம். முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
அபிவிருத்திகளை மக்களின் காலடிக்குக் கொண்டு செல்வதே கிழக்கு மாகாண சபையின் நோக்கம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது வசதிகள் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்  ஏறாவூர் பெண் சந்தைக் கட்டிடத் தொகுதியை புனர் நிர்மாணம் செய்வதற்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் ஞாயிறன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும் ஈடுபடும் பெண்களுக்கான ஒரேயொரு சந்தையாக உள்ள இதனை நவீனமயப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சந்தை விற்பனவுடன் மட்டும் நின்று விடாது நவீன கட்டிடத் தொகுதியில் பல்வேறு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஒரு பயிற்சிக் களமாகவும் உருவாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்கள் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை, அந்த வகையில் மக்களின் வரிப்பணத்துடன் இயங்கும் இந்த உள்ளுராட்சி நிறுவனங்கள் மக்களது வரிப்பணத்தை மக்களது அபிவிருத்திக்கே முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்’என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: