19 May 2016

மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் சகவாழ்வை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சி

SHARE
நாடாளாவிய ரீதியில் மழையும் வெள்ளமும் நிலவுகின்ற வேளையிலும் சமூகங்களுக்குகிடையிலான சகவாழ்வை வலியுறுத்தி இன உறவை வலுப்படுத்தும் விதமாக சுமார் 200 இற்கு மேற்பட்ட சிங்கள மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு புதன்கிழமை நட்புறவு விஜயத்தை மேற்கொண்டதாக அதிபர் எஸ். ரவிதேவன் தெரிவித்தார்.
“அன்பின் நட்புறவுப் பாடசாலை”த் திட்டத்தின் கீழ் வெலிமடை-கெப்பிற்றிபொல சிங்கள மஹா வித்தியாலயமும் மட்டக்களப்பு தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயமும் இணைக்கப்பட்டு இவ்விரு பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பரஸ்பர விஜயத்தை நிறைவு செய்துள்ளனர்.

புதன்கிழமை தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் இடம்பெற்ற நட்புறவு நிகழ்வில் கெப்பிட்டிபொல சிங்கள மஹா வித்தியாலய மாணவர்கள் தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களைப் பரிசாக வழங்கியதோடு அவர்களால் சேகரிக்கப்பட்ட 12 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மாணவர்களின் நலன்புரி வேலைகளுக்காக அன்பளிப்புச் செய்தனர்.

இதேவேளை கெப்பிற்றிபொல மஹா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 200 பேருக்கு தளவாய் விக்னேஸ்வரா பாடசாலை நிருவாகத்தினரால் பகல்போசனமும் வழங்கப்பட்டது.

இன உறவைப் பேணும் கல்வி அமைச்சின் சமாதானத்துக்கான பிரிவினால் பரஸ்பரம் சிங்கள தமிழ் முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் சகவாழ்வுக்காக இந்நிகழ்ச்சித் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.







SHARE

Author: verified_user

0 Comments: