6 May 2016

கால்நடை வளர்ப்பாளர்களின் நன்மை கருத்தி பல செயற்பாடுகள் முன்னெடுப்பு.

SHARE
போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நன்மை கருத்தி பாற்பொருள் உற்பத்தி செய்தல், நல்லின காளைமாடு வளர்த்தல், தயிர்உற்பத்தி, சினைப்படுத்தல், போன்ற பல திட்டங்கள் எம்மிடம் உள்ளன இவைகளை பண்ணையாளர்கள் பெற்று வாழ்வாதார ரீதியாக முன்நேற்றடைய வேண்டும். எனவே இவைகளுக்காக வேண்டி இப்பிரதேச கல்நடை வளர்ப்புச் சங்கத்துடன் இணைந்து பண்ணையாளர்கள் திறம்பட செயற்பட வேண்டும்.
என போரதீவுப் பற்று பிரதேச கால்நடை வைத்தியர் சி.ருசியந்தன் தெரிவித்தார். போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் ஒன்று தும்பங்கேணி அமுதசுரபி பால் பதநிடும் நிலையத்தில் வியாழக் கிழமை (05) நடைபெற்றது. 

போரதீவுப்பற்றுப் பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்…

மாடுகளுக்குத் தேவையான புற்கள், வைக்கோல்,  போன்றவற்றை தினமும் வழங்குவது போல், கல்சியம்தூள், சத்து மருந்துகள் போன்றவற்றையும் பண்ணையாளர்கள் காலத்துக்குக் காலம் கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இப்பிரதேசத்திலிருந்து குறைந்த விலையில் வெளியிலிருந்து வரும் வியாபாரிக்கு கால்நடைகள் விற்பனை வெய்வதைத் தடுக்கும் முகமாக போரதீவுப்பற்று பிரதேச மட்டுப் படுத்தப்பட்ட கால்நடை பண்ணையாளர் சங்கமம், உலக தரிச நிறுவனந்துடன் இணைந்து கால்நடைகளை உயிருடன் மிகத் தந்த விலையில் விற்பனை செய்யும் சந்தை வசதி ஒன்றையும், மிகவிரைவில் ஏற்படுத்தவுள்ளது. இவ்வாறு அமையவிருக்கும் சந்தை வசதியினால் இப்பிரதேச பண்ணையாளர்கள் அதிக இலாபங்களை ஈட்டக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.

பண்ணையாளர்கள், மாலை வேளைகளிலும், பால் கறக்க வேண்டும், மாலை வேளைகளில் கறக்கும் பால் அனைத்தையும், இப்பிரதேச கல்நடை வளர்ப்போர் சங்கம் கொள்வனவு செய்வதற்குத் தயாராக இருக்கின்றது. இதேவேளை இப்பிரதேசத்திலுள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் இப்பகுதியில், இயற்கையாகவே கிடைக்கும் வைக்கோலைச் சேமித்து வைத்தல், புல் வளர்த்தல், போன்ற செயற்பாடகளிலும் ஈடுபட வேண்டும்.

எனவே பண்ணையாளர்கள் நல்லினக் கறைவை மாடுளைப் பெருக்க வேண்டும், இவற்றுக்காக வேண்டி பண்ணையாளர்களின் நலன் கருதி எமது திணைக்களமும், கால்நடை அபிவிருத்திச் சங்கமும், உலக தரிசன நிறுவனம் போன்ற தன்னார்வ தொண்டர் அமைப்புக்களும், உறுதுணையாக இருந்து செயற்பட்டு வருகின்றன. இவர்களது ஆதரவுகளைப் பெற்று பண்ணையார்கள் வாழ்வாதார ரீதியாக முன்னேற்றமடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், எலக தரிசன நிறுவனத்தின் பிரதிநிதிகள், பெரண்டீனா நிறுவனத்தின் பிரதிநிதிகளும், கல்நடை வளர்ப்போர் சங்க உறுப்பினர்கள் அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: