இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ. உதயரூபன் மீது மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் வைத்து சனிக்கிழமை 21.05.2016 தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி ஆசிரியருமான பொ. உதயரூபன் சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தாக்குதலுக்குள்ளான உதயரூபன் கூறும்போது, தான் பாடசாலை மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் விடுமறை தினங்களிலும் கூட இலவசமாக வகுப்புக்கள் நடாத்தி வருவதாகவும் அதனடிப்படையயில் வழமைபோன்று 21.05.2016 அன்றும் மஹாஜனக் கல்லூரியில் வகுப்புக்களை நடத்திக் கொண்டிருந்தபோது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மஹாஜனக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரான நிலாகரன் என்பவரே தன் மீது தாக்குதல் நடாத்தியதாக அவர் தனது பொலிஸ் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment