27 May 2016

ஆரையம்பதி கடற்கரை பகுதியில் சட்டவிரோத மண்அகழ்வு

SHARE
காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கடற்கரை நரசிம்ம ஆலயத்தை அண்டிய கடற்கரைப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு வியாழக் கிழமை (25)  இனந்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் கரையோரம்பேணும் திணைக்களத்தின் அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

மக்கள் நடமாற்றம் அற்ற இப்பகுதியில் மண்ணேற்றும் இயந்திரத்தினை பயன்படுத்தி கனகரக வாகனத்தினை (டிப்பிங்) கொண்டு மண்ணேற்றி கல்லடிபக்கமாக குறித்த மண் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்அகழ்வு இடம்பெற்ற பிரதேசத்தில் உபபொலிஸ் நிலையமொன்றும் அமையப்பெற்றிருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றமை மக்கள் மத்தியில் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் இப்பிரதேசத்து மக்கள் குறிப்பிடுகின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: