29 May 2016

ஆசிரியர் சிவகுரு-கோமதி அவர்கள் வரலாற்று பாடத்துறையின் முன்னேற்றத்திற்கான உயிர்நாடி

SHARE
களுவாஞ்சி நகரில் காலஞ்சென்ற சிவகுரு பார்வதி தம்பதிகள் ஈன்றெடுத்த இரண்டாவது புத்திரி கோமதி ஆசிரியை அவர்கள்  ஆரம்பக்கல்வியை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும், தனது இரண்டாம் தரக் கல்வியை அதாவது 9-11 வரை வின்சென்ற் மகளீர் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை கலைப்பிரிவில் களுதாவளை மகாவித்தியாலயத்திலும் கற்றார் உயர்தரத்தில் சிறந்த பேறுபேற்றினைப் பெற்று பேராதனை பல்கலைக் கழகத்திற்கு 1979 ஆண்டு  தேர்வாகி  தனது மேற்படிப்பினை மேற் கொண்டு 1982 ஆண்டு கலைப்பட்டதாரியாக வெளியேறினார்.
1982-1984 ஆண்டு வரை ரெட்பானா எனும் அரச சார்பற்ற தொண்டாற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்தார்.

1984 ஆகஸ்ற் மாதம் 5 ஆம் திகதி  ஆசிரியர் நியமனம் கிடைக்கப்ப பெற்றது. இதன் பிரகாரம் ஆசிரியர் சேவையின் முதலாவது பாடசாலையாக   புத்தளம் முதலைப்பாளி மகாவித்தியாலயம் அமைந்திருந்தது. அதன்பின்னர் புத்தளம் பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயம், போன்ற பாடசாலைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றியதன் காரணமாக தனது சேவையினை சொந்த ஊருக்கு ஆற்ற வேண்டும் என்ற நோக்குடன்  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியபாடசாலை களுவாஞ்சிகுடியில் சுமார் 17 வருடங்கள் ஆசிரியராகவும், உபஅதிபராகவும் பணியாற்றி மே மாதம் 27 ஆம் திகாதியுடன் சுமார் 32 வருடங்கள் கடமையாற்றி தனது அசிரியர் சேவையினை முடித்துக் கொண்டார்.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் வரலாற்று படத்தினை கற்ப்பிப்பதில் தேர்ச்சி பெற்றவராக விளங்கிய இவர் வலயத்தில் வலாற்று பாடத்தினை உயர்தர மாணவர்களுக்கு ஆரம்பித்து வைத்த ஆரம்பகத்தாவாகவும் விளங்குகின்றார். உயர்தர(வரலாறு) விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் பலகாலம் தொடக்கம் ஓய்வு பெறும் வரையில் பிரதம பரீட்சகராக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்று பாடம் கடினமான பாடம்  எனும் தோற்றப்பாடு மாணவரிடையே வேரூன்றி இருந்தது. இதன் விளைவால் உயர்தரத்தில் அப்பாடத்தினை கற்பதற்கு மாணவர்கள் முன்வராத நிலை வலயத்தில் காணப்பட்ட போது, அதனை தகர்த்தெறிந்து இலகுவானபாடம் வரலாறு மாத்திரந்தான் எனும் மனோ நிலையினை மாணவர் மத்தியில் உருவாக்கி, அதிகூடிய மாணவர்களை உயர்தரத்தில் கற்கவைத்து, அதிகூடிய பெறுபேற்றினை வலயத்திற்கு பெற்றுக் கொடுத்த பெருமைக்குரிய ஆசிரியர் என்றால் அது மிகையாகாது. தற்போது உயர்தரத்தில் அதிகூடிய மாணவர்கள் வரலாற்று பாடத்தினை இவ்வலயத்தில் கற்றுக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்கான காரணகத்தா கோமதி ஆசிரியை தவிர வேறு எவரும் இருக்கமுடியாது.








SHARE

Author: verified_user

0 Comments: