(இ.சுதா)
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின் தாக்கமானது மக்களின் பொருளாதார உட்கட்டமைப்புக்களிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளமையினைக் காணக் கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு
அம்பாறை மாவட்டங்களில் வேளாண்மைச் செய்கையில், அண்மைக் காலங்களாக பல பாதிப்புக்களை எதிர் கொண்டு வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த மாவட்டங்களில் வேளாண்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் குளங்களிலிருந்து வழங்கும், நீர்பாசன விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப் பட்டுள்ளமையினால் அதிக உசீனம் காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்தியமுகாம்இ இலுப்பைக்குளம் போன்ற பிரதேசங்களில் வேளாண்மை நடவடிக்கையானது பாதிப்பினை எதிர் கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாய நடவடிக்கையினை ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொள்கின்ற தாம் பல்லாயிரக்கணக்கான பணத்தினை வேளாண்மை நடவடிக்கைக்காக முதலீடு செய்துள்ள நிலையில் நீர்ப்பாசன விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விவசாயம் அழிவடைவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சில பிரதேசங்களுக்கு மாத்திரம் நீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும் ஏனைய இடங்களுக்கு முழுமையாக நீர் விநியோகத்தினை மட்டுப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது தமக்கு ஏற்படுகின்ற நட்டத்திற்கு உரிய அதிகாரிகளே பொறுப்புக் கூறவேண்டுமெனவும், அப்குதி விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக துரிதமாக நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமெனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment