(ஏ.ஹுஸைன்)
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
நபரொருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் ஞாயிற்றுக்;கிழமை இரவு (08.05.2016) மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைது இடம் பெற்றுள்ளது.
நற்பிட்டிமுனை ஆலையடி வடக்கு வீதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த 22 வயதான நபரிடமிருந்து 2 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment