21 May 2016

மட்டக்களப்பு "பாடுமீன்களின் சமர்

SHARE
(க.விஜி) 

மட்டக்களப்பு "பாடுமீன்களின் சமர்எதிர்வரும் 2016.6.4(சனிக்கிழமை)ஆம் திகதி நடைபெறவுள்ளது.கடந்த மாதம் 14ம் திகதி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதற்கு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்
அதிபர் தலைமையிலான நிருவாகமும்,புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் தலமையிலான நிருவாகமும் கூட்டாக இணைந்து முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தது.நாட்டில்,மாவட்டத்தில் ஏற்பட்ட மழை,வெள்ளம், காரணமாக பாடுமீன்சமர் பிற்போடப்பட்டது.

இந்தநிலையில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் (20.5.2016)வெள்ளிக்கிழமை காலை 11.00மணியளவில் இரண்டு பாடசாலையின் அதிபர்களையும்,உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.லவக்குமார் அவர்களையும்  வலயக்கல்வி பணிமனைக்கு அழைத்து ஆலோசனைகளை பெற்றார்.

இதற்கான  உத்தியோகபூர்வமான திகதியை எதிர்வரும் யூன் மாதம் ஆறாந்திகதியை  வலயக்கல்விப்பணிப்பாளர்  கே.பாஸ்கரன் வழங்கியுள்ளதாக அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும்பாடுமீன்களின் சமர்பிக்மட்ஸ் எதிர்வரும் (4.6.2016)ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30முதல் மாலை 6.00 வரை கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.


மட்டக்களப்பு மத்திய கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகிய இரண்டு  அணிகளுக்கிடையிலான அணியே இவ்வாறு மோதிக்கொள்கின்றன.இதற்கான களப்பயிற்ச்சினை விளையாட்டுவீரர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.




தேசிய அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளையின் முழுமையான அனுசரணையின் மூலம் "பாடுமீன்சமர்" நடைபெறவுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்,கணக்காளர், வங்கி முகாமையாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்கள்,பழையமாணவர்கள்,கலந்து கொள்ளவுள்ளார்கள்
SHARE

Author: verified_user

0 Comments: